அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!

புதிய அரசின் வேளாண் மற்றும் நிதிநிலை இரண்டிலும் பல நல்ல விஷயங்கள் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கூறியுள்ளார்.

இந்தியாவில் மாற்றத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு அகற்றிட நாடு தழுவிய அளவில் மக்கள் சந்திப்பு பரப்புரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 06ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபயண பிரச்சாரம் செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார பயணம் இன்று சேலம் பனமரத்துப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கலந்து கொண்டார்.

எதிர்த்தவர் ஸ்டாலின்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி முத்தரசன், “சட்டமன்ற கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 543 தொடரும் என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்து முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றுப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் காவிரி நதிநீர் பிரச்சனையில் ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். தொகுதி மறு வரையை கொண்டு வர முயன்ற போது கடுமையாக எதிர்த்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். எல்லோரும் ஒற்றுமையுடன் எதிர்ப்பு தெரிவித்து மசோதா தோற்கடிக்கப்பட்டது. அதே நடவடிக்கையைத்தான் திமுக மேற்கொள்ளும்.

பட்ஜெட்டுக்கு வரவேற்பு

புதிய அரசின் வேளாண் மற்றும் நிதிநிலை இரண்டிலும் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. குறிப்பாக நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் பட்டு சேலை, வீடு கட்டுபவர்களுக்கு ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது, மீனவர்களுக்கு 6000 ரூபாய் உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது . அதே நேரத்தில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். மின் கட்டண விவகாரத்தில் என்ன குளறுபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. அதைப் பற்றிஆய்வு செய்து சரி செய்யப்படும் என்று அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள். சரி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தால் மட்டும் போதாது உடனடியாக அவற்றை சரி செய்ய வேண்டும். அதேபோல் தடையில்லா மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் வேளாண் மற்றும் நிதிநிலை அறிக்கைகளில் பல சாதகமான அம்சங்கள் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசை அகற்றி நாட்டில் மாற்றத்தை உருவாக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 6-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவிலான மக்கள் சந்திப்பு மற்றும் நடைபயணப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சேலம் பனமரத்துப்பட்டியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.