SCS Scheme: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ஓய்வுக்குப் பிறகு பணத்தை அள்ளித்தரும் சேமிப்பு திட்டம்!

உங்களுக்கு 60 வயது அல்லது அதற்கு மேல் ஆகிவிட்டாலோ அல்லது உங்கள் வீட்டில் மூத்த குடிமக்கள் இருந்தாலோ, இது அவர்களுக்கு ஒரு நற்செய்தி அவர்களுக்கு உதவும் ஒரு அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த சேமிப்புத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் மூத்த குடிமக்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான வருமானத்தை விரும்புபவர்களுக்கும், அல்லது அந்த வயதை அடைந்தவர்களுக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் உத்தரவாதமான வட்டியை வழங்குகிறது.இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு காலாண்டிலும் வட்டித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். எனவே, ஓய்வுக்குப் பிறகு கவலையற்ற வருமானத்திற்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.

<iframe title="Vijaya Prabhakaran on CM Vijay | CM விஜய் பற்றி எல்லைமீறி பேசிய விஜய பிரபாகரன்! பிரேமலதா ரியாக்ஷன்" src="https://www.youtube.com/embed/HId4AKL95KA" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

எவ்வளவு வட்டி கிடைக்கும்?

ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ரூ.25,000 வரை நிலையான வருமானம் பெற விரும்பினால் நீங்கள் 12.20 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். 8.2 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,00,040 வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு தனிநபர் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒரு மூத்த குடிமக்கள் தம்பதியினர் தனித்தனியாகக் கணக்குகளைத் திறந்தால், அவர்கள் இருவரும் சேர்ந்து ரூ.60 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் பணத்தை இழக்கும் அபாயம் இல்லை என்பதால் தாரளமாக முடிவு செய்யலாம்.

Senior Citizen Savings Scheme (SCSS) என்ற பெயர் கொண்ட இந்த திட்டத்தில் நீங்கள் 5 வருட காலத்திற்கு ஒரு கணக்கைத் திறக்கலாம். 5 வருடங்கள் முடிந்த பிறகு, அதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், நீங்கள் ஒருமுறை கணக்கைத் திறந்துவிட்டால், எதிர்காலத்தில் அரசு வட்டி விகிதங்களைக் குறைத்தாலும் கூட, முழு 5 வருடங்களுக்கும் உங்களுக்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கும்.

இந்தக் கணக்கை உங்கள் அருகிலுள்ள தபால் அலுவலகத்திலோ அல்லது ஏதேனும் அரசு அல்லது தனியார் வங்கியிலோ திறக்கலாம். இந்தக் கணக்கில் ஈட்டப்படும் வட்டிக்கு முழுமையாக வரி விதிக்கப்படும். ஓர் ஆண்டில் நீங்கள் ஈட்டும் மொத்த வட்டி ரூ. 50,000-க்கு மேல் இருந்தால், அதில் TDS பிடித்தம் செய்யப்படும். இருப்பினும், ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் படிவம் 15H-ஐச் சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் TDS பிடித்தத்தைத் தவிர்க்கலாம்.

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு பிரத்யேகமான சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் மிகச்சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
இந்த சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி வழங்கப்படுகிறது. தகுதியுள்ள மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.