PulseNews
வணிகம்

வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி தந்த தங்கம் விலை; வெள்ளியின் நிலவரம் என்ன?

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சமீபத்தில் தங்கம் விலை சற்று குறைந்து நகைப் பிரியர்களுக்கு மன நிம்மதியை தந்த நிலையில் மீண்டும் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்ற சி.ஜே.பி முகங்கள்; ராஞ்சியில் காணாமல் போனது ஏன்? ஆகஸ்ட் 13-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனையானது. இந்த நிலையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,420-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தங்கம் விலை நிலவரம் இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய வெள்ளி விலை நிலவரம் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து நிலையாக நீடிக்கிறது. அதன் படி, வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் (2 லட்சத்து 55 ஆயிரம்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி தந்த தங்கம் விலை; வெள்ளியின் நிலவரம் என்ன?
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த மூன்று நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்று ஒரு சவரன் தங்கம் 160 ரூபாய் அதிகரித்து 1,13,760 ரூபாய்க்கு விற்பனையானது.

தொடர் உயர்வுக்குப் பிறகு, ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்துள்ளது. வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் நுகர்வோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business