CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு

தவெக அரசின் 100 நாள் சாதனை

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகாலமாக திராவிட கட்சிகளான திமுக- அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளையும் வீழ்த்தி கெத்து காட்டியுள்ளது தவெக, அந்த வகையில் தொழில் முதலீடுகளை ஈர்த்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்று இன்றோடு 100 நாட்களை எட்டியுள்ளது. அந்த வகையில் தொழில் முதலீடுகளையும் ஈர்த்து தவெக அரசு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 100 நாட்களில் என்ன சாதித்து என்பதை தற்போது பார்க்கலாம்.

ஒரு லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

அந்த வகையில், தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது மட்டுமில்லாமல் இந்த தொழில் முதலீடுகள் மூலம் சுமார் 1,21,788 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகள் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் செல்லாமல் தமிழகம் முழுவதும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலக்கோடு பல திட்டங்கள் மாவட்டம் முழுவதும் தொடங்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், சென்னை, தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, வேலூர், கோயம்புத்தூர், ராமநாதபுரம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் தொழிற்திட்டங்கள் பரவலாக மேற்கொள்ளப்படவுள்ளது.

தவெக அரசின் முதலீட்டாளர்கள் மாநாடு

அந்த வகையில் தவெக அரசு பதவியேற்று 100 நாட்களுக்குள் முதலீட்டாளர்கள் மாநாட்டையும் நடத்தி தொழில் முதலீடுகளை ஈர்த்து அசத்தியுள்ளது. சென்னையில், நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்’, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் தொழில்,

1 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 67,452 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 1,06,998 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் (1,02,514 கோடி ரூபாய்) ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,21,788 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டு அசத்தியுள்ளது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு.

Source: Read Full Article

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நீடித்த திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியை அமைத்தது. முதலமைச்சராக விஜய் பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
கடந்த 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ள தவெக அரசு, இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.