சேலம் விமான சேவை: கொச்சி, பெங்களூரு ரூட்டில் அக்டோபர் 29 தான் கடைசி- நீட்டிக்கப்படுமா உதான் திட்டம்?
சேலத்தில் சென்னை தவிர்த்த பிற விமான சேவைகளுக்கு சிக்கல் வரவுள்ளது. உதான் திட்டம் காலாவதி ஆகும் நிலையில், வரும் அக்டோபர் மாதத்துடன் கொச்சி, பெங்களூரு நகரங்களுக்கு பயணிக்க முடியாது என்று தெரிய வந்துள்ளது. ஆனால் ஒப்பந்தத்தை நீட்டித்து தொடர்ந்து இயக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னை தவிர்த்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் முடக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. உதான் திட்டத்தின் கீழ் கொச்சி மற்றும் பெங்களூருவுக்கு இயக்கப்பட்டு வரும் விமான சேவைகள், வரும் அக்டோபர் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றன.
இந்த விமான சேவைகளைத் தொடர்ந்து இயக்குவதற்காக, ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் திட்டம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தற்போதைய நிலையில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.