PulseNews
வணிகம்

என்னா ஒரு ஸ்பீ.. டு வேளாண் பட்ஜெட் தாக்கலான 6 நாட்களில் நடந்த அற்புதம்! வங்கிக் கணக்கை அதிர வைக்கப் போகும் புதிய மானியத் தொகை.... விவசாயி வெளியிட்ட வீடியோ!!!

தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பட்ஜெட்டில் இடம்பெற்ற அறிவிப்புகள் அடுத்தடுத்த நடவடிக்கைகளாக மாறத் தொடங்கியுள்ளன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வெறும் 6 நாட்களிலேயே விவசாயிகளுக்கான சில திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் விவசாயிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. 6 நாட்களிலேயே நடைமுறைக்கு வந்த திட்டம் தோட்டக்கலை மற்றும் காய்கறிச் சாகுபடியை மேம்படுத்தும் நோக்கில், பந்தல் அமைத்து பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, பந்தல் அமைக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,20,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. காய்கறி சாகுபடியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த உதவி முக்கியத்துவம் பெறுகிறது. இதையும் படிங்க: சட்டசபையில நாளைக்கு தான் சம்பவமே இருக்கு! பதில் சொல்ல ரெடியா இருங்க விஜய்..... விளாசி தள்ளிய எதிர்க்கட்சித் தலைவர்.!!! விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்கும் பலன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நீண்ட காலம் காத்திருக்காமல் செயல்படுத்தும் நடவடிக்கை விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, பந்தல் அமைப்பதற்கான செலவில் மானியம் கிடைப்பதால் காய்கறி மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிதிச்சுமை குறைய வாய்ப்புள்ளது. தொடர் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு வெறும் அறிவிப்புகளுடன் நின்றுவிடாமல், திட்டங்களை உடனுக்குடன் களத்தில் செயல்படுத்துவது விவசாயிகளிடையே சாதகமான பார்வையை உருவாக்கியுள்ளது. இதையடுத்து வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மற்ற திட்டங்களும் விரைவாக நடைமுறைக்கு வந்து, அதன் பலன்கள் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்பதே விவசாய வட்டாரத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. வேளாண் பட்ஜெட் வெளியிட்டு 6 நாட்கள் தான்... அதற்குள் பந்தல் அமைக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹1,20,000 வழங்கும் திட்டம் நடைமுறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 👏🌾 அறிவிப்புகள் காகிதத்தில் மட்டும் இல்லை... விவசாயிகளின் கைகளில் சென்றடையும் செயலாக மாறியுள்ளது. மகிழ்ச்சி 🙂... pic.twitter.com/qqChnPpkzo — Vivek Rangasamy (@VivekRangasamy) August 18, 2026 இதையும் படிங்க: வரி வரியாய் CM விஜயை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் வினோத்! அடுத்த நொடி கண்டித்த சபாநாயகர்... வேளாண் பட்ஜெட்டை மட்டும் வாசிங்க! வைரலாகும் வீடியோ...!!!

Tamil Spark14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
என்னா ஒரு ஸ்பீ.. டு வேளாண் பட்ஜெட் தாக்கலான 6 நாட்களில் நடந்த அற்புதம்! வங்கிக் கணக்கை அதிர வைக்கப் போகும் புதிய மானியத் தொகை.... விவசாயி வெளியிட்ட வீடியோ!!!
PulseNews சுருக்கம்

தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்ற திட்டங்கள், வெறும் 6 நாட்களில் செயல்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளன. தோட்டக்கலை மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், பந்தல் அமைத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கான மானியம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தங்களுக்கு கிடைக்கவிருக்கும் மானியத் தொகை குறித்து விவசாயி ஒருவர் வெளியிட்ட காணொளி, தற்போது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு அறிவித்த திட்டங்கள் விரைவாக நடைமுறைக்கு வருவதைக் கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#business