கூகுள் பே, போன்பே-வில் பணம் போயிடுச்சா? யு.பி.ஐ ஆப்பில் இருக்கும் இந்த ஒரு பட்டனை உடனே பிரஸ் பண்ணுங்க
யு.பி.ஐ. மூலமாகப் பணம் அனுப்பும்போது, கணக்கில் இருந்து பணம் கழிந்தும் பரிவர்த்தனை "தோல்வி" (Failed) என வந்தால் உடனே பயப்படத் தேவையில்லை. தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஏற்படும் இந்த சிக்கலைத் தீர்க்க வங்கியும் என்.பி.சி.ஐ. அமைப்பும் தெளிவான பாதுகாப்பு வழிகளை உருவாக்கியுள்ளன. உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக திரும்பப் பெற உதவும் வழிகாட்டி இதோ. பணம் பிடித்தம் செய்யப்பட்டவுடன் பதற்றமடைந்து மீண்டும் உடனடியாகப் பணம் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். முதல் பரிவர்த்தனை தாமதமாக வெற்றிகரமாகத் முடிந்தால், இரட்டிப்பாகப் பணம் இழக்க நேரிடும். பெரும்பாலும் 60 நிமிடங்களுக்குள் இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகள் சரியாகி பணம் தானாகவே உங்கள் கணக்கிற்குத் திரும்பிவிடும். எனவே, சிறிது நேரம் பொறுமையாக இருப்பது மிக முக்கியம். யு.பி.ஐ. பேமெண்ட் ஏன் தோல்வியடைகிறது? யு.பி.ஐ. பணம் செலுத்துவது தோல்வியடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. தவறான யு.பி.ஐ. பின், வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லாதது, தவறான யு.பி.ஐ. முகவரி உள்ளிட்டவை பொதுவான காரணங்கள். மேலும், ஒரு நாளில் செய்யக்கூடிய பரிவர்த்தனை எண்ணிக்கை அல்லது தொகை வரம்பை கடந்தாலும் பணம் செலுத்த முடியாமல் போகலாம். சில வங்கிகள் தங்களுக்கென தனி தினசரி பரிவர்த்தனை வரம்புகளையும் வைத்திருக்கலாம். இதுதவிர, வங்கியின் சர்வர் பிரச்சினை, இணைய இணைப்பு பாதிப்பு, யு.பி.ஐ. பராமரிப்பு பணிகள் அல்லது பணம் செலுத்தும் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறும் காரணமாக இருக்கலாம். யு.பி.ஐ. செயலியில் பரிவர்த்தனை நிலையைச் சரிபார்க்கவும் ஒருவேளை பணம் திரும்ப வரவில்லை எனில், உங்கள் கூகுள் பே, ஃபோன்பே அல்லது பேடிஎம் செயலியில் உள்ள 'UDIR' வசதியைப் பயன்படுத்தலாம். செயலியின் 'History' பகுதிக்குச் சென்று, தோல்வியடைந்த பரிவர்த்தனையைக் கிளிக் செய்து 'Check Status' அல்லது 'Raise Issue' என்பதைக் கொடுத்தால் உடனே தீர்வு கிடைக்கும் செயலி மூலம் தீர்வு கிடைக்காதபட்சத்தில், அதில் உள்ள 'Help & Feedback' பகுதியில் புகார் அளிக்கலாம். வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள் செயலியில் புகார் அளித்தும் பிரச்சினை தீரவில்லை என்றால், உங்கள் வங்கியின் யு.பி.ஐ. தொடர்பான வாடிக்கையாளர் சேவைப் பிரிவை அணுகலாம். வங்கியைத் தொடர்பு கொள்ளும்போது இந்த விவரங்களைத் தயாராக வைத்திருங்கள்: யு.பி.ஐ. பரிவர்த்தனை எண் அல்லது UTR எண் உங்கள் வங்கிக் கணக்கு அல்லது யு.பி.ஐ. ஐடி வணிக நிறுவனத்தின் பரிவர்த்தனை விவரம் பணம் செலுத்திய தேதி மற்றும் நேரம் செலுத்திய தொகை புகார் அளித்த பிறகு கிடைக்கும் ரெஃபெரென்ஸ் நம்பரை (Complaint Reference Number) மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆர்பிஐ (RBI) விதிகளின்படி, நபர் டூ நபர் (P2P) பரிவர்த்தனை தோல்வியடைந்தால் T+1 வேலை நாளுக்குள்ளும், வணிகர் (Merchant) பரிவர்த்தனை தோல்வியடைந்தால் T+5 வேலை நாளுக்குள்ளும் வங்கி பணத்தைத் திருப்பியளிக்க வேண்டும். இந்த காலக்கெடுவைத் தாண்டினால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வங்கி உங்களுக்கு வழங்க வேண்டும். ஒருவேளை 30 நாட்களுக்கு மேலாகியும் வங்கி உங்கள் புகாரைத் தீர்க்கவில்லை என்றால், இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர் அமைப்பை (RBI Integrated Ombudsman) அணுகலாம். புகார் அளிக்கும் போது பரிவர்த்தனை ஸ்கிரீன்ஷாட்கள், வங்கி அல்லது செயலியுடன் மேற்கொண்ட தொடர்புகளின் விவரங்கள், புகார் எண் மற்றும் வணிக நிறுவனத்தின் ஆர்டர் விவரங்கள் போன்றவற்றை இணைப்பது உதவும்.

யு.பி.ஐ மூலமாகப் பணம் அனுப்பும்போது, வங்கிக் கணக்கில் பணம் குறைந்தும் பரிவர்த்தனை தோல்வியடைந்ததாகக் காட்டினால் பயப்படத் தேவையில்லை. இந்தச் சிக்கலைச் சரிசெய்ய வங்கியும் என்.பி.சி.ஐ அமைப்பும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்கியுள்ளன.
பணம் பிடித்தம் செய்யப்பட்டவுடன் மீண்டும் உடனடியாகப் பணம் அனுப்பும் முயற்சியைத் தவிர்க்க வேண்டும். முதல் பரிவர்த்தனை தாமதமாக வெற்றிகரமாக முடிய வாய்ப்புள்ளதால், பதற்றமடையாமல் பொறுமை காப்பது அவசியம்.