கனடா-அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வி
கனடா நாட்டு பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதித்ததன் மூலம் அமெரிக்கா தங்கள் மீது வர்த்தகப் போர் தொடுத்துள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்தது. பேச்சுவார்த்தையில், கனடாவின் நலன்களை பாதிக்கும் நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைத்ததாக குற்றம்சாட்டிய கார்னி, அமெரிக்கா விதித்துள்ள வரிகளுக்கு இணையாக பதிலுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் எஃகு மற்றும் பால் பொருட்களை குறிவைத்து விதிக்கப்படும் புதிய வரிகள், அடுத்த மாதம் 8-ம் தேதி முதல் அமலுக்குவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கனடா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. கனடாவின் நலன்களைப் பாதிக்கும் வகையிலான நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைத்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் என கனடா பிரதமர் மார்க் கார்னி குற்றம் சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்கா தங்கள் மீது வர்த்தகப் போரைத் தொடுத்துள்ளதாக மார்க் கார்னி விமர்சித்துள்ளார்.