PulseNews
வணிகம்

TN Assembly Live Updates: சட்டசபையில் இன்று கேள்வி நேரம் - 2 துறை மீது மானியக் கோரிக்கை விவாதம்

தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது. இந்நிலையில், 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது. நேற்று மிலாது நபி என்பதால் அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இதுவரை கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்று முதல் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. பொதுவாக, கேள்வி நேரத்தில் 10 கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், தற்போது 5 கேள்விகள் எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறைகளில் இருந்து பதில் வராதது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் பேசுகின்றனர். தங்களது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
TN Assembly Live Updates: சட்டசபையில் இன்று கேள்வி நேரம் - 2 துறை மீது மானியக் கோரிக்கை விவாதம்
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் முறையே பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்களும், அமைச்சர்களின் பதில் உரைகளும் நடைபெற்றன.

கடந்த 17-ம் தேதி முதல் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 27 துறைகள் தொடர்பான விவாதங்கள் நிறைவடைந்துள்ளன. மிலாது நபி விடுமுறைக்கு பிறகு, இன்று சட்டசபையில் கேள்வி நேரம் மற்றும் இரண்டு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business