PulseNews
வணிகம்

சவரனுக்கு அதிரடியாக ரூ.1,440 சரிவு; இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நகைப்பிரியர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,440 குறைந்துள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கம்: ரூ. 1,12,320 ஒரு கிராம் தங்கம்: ரூ. 14,040 (கிராமிற்கு ரூ. 180 குறைந்துள்ளது) கடந்த நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, நேற்று சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனையான நிலையில், இன்று இந்த திடீர் வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய வெள்ளி விலை நிலவரம்: தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி: ரூ. 255 (கிராமிற்கு ரூ. 5 குறைந்துள்ளது) ஒரு கிலோ (பார்) வெள்ளி: ரூ. 2,55,000 (கிலோவிற்கு ரூ. 5,000 குறைந்துள்ளது) கடந்த 5 நாட்களின் தங்கம் விலை நிலவரம் (சவரன் - 22 கேரட்): 13-08-2026 - 1,13,760 12-08-2026 - 1,13,600 11-08-2026 - 1,13,200 10-08-2026 - 1,11,600 09-08-2026 - 1,11,720 கடந்த 5 நாட்களின் வெள்ளி விலை நிலவரம் (1 கிராம்) 13-08-2026 - 260 12-08-2026 - 260 11-08-2026 - 260 10-08-2026 - 250 09-08-2026 - 250

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சவரனுக்கு அதிரடியாக ரூ.1,440 சரிவு; இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
PulseNews சுருக்கம்

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கம் 1,12,320 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 180 ரூபாய் குறைந்து 14,040 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் 1,13,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business