PulseNews
வணிகம்

அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் உள்ளிட்ட 389 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் 389 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலாளர் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல், நிதி, சட்டம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் மேலாளர் பதவிக்கு மொத்தம் 260 காலியிடங்கள் உள்ளன. சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பொறியியல், நிதி, தகவல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை, சட்டம், தீயணைப்புச் சேவை, செயல்பாடுகள், வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு 129 காலியிடங்கள் உள்ளன. இதில் நிதி, சட்டம் மற்றும் செயல்பாடுகள் ஆகிய பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய துறையில் பட்டப்படிப்புடன் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு முன் பணி அனுபவம் தேவையில்லை என்பதால், புதிதாக பட்டம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். B.E., B.Tech, B.Arch, LLB, MBA, CFA, CA உள்ளிட்ட தொடர்புடைய கல்வித் தகுதி பெற்றவர்கள் தங்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பைப் பொறுத்தவரை, 2026 செப்டம்பர் 7-ம் தேதியின்படி மேலாளர் பணிக்கு அதிகபட்சம் 32 வயதும், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு அதிகபட்சம் 27 வயதும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி தகுதியான பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும். மேலாளர் பணிக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.1.80 லட்சம் வரையிலும், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு ரூ.40,000 முதல் ரூ.1.40 லட்சம் வரையிலும் சம்பளம் வழங்கப்படும்.

தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலாளர் பணிக்கு நேர்காணலும் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aai.aero மூலம் விண்ணப்பிக்கலாம்.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
PulseNews சுருக்கம்

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) மேலாளர் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில் மொத்தம் 389 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அரசு வேலை தேடும் ஆர்வலர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். தகுதியுடைய நபர்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business