PulseNews
வணிகம்

கோவைக்கு புதிய அம்ரித் பாரத் ரயில்; சென்னை, ஜோலார்பேட்டை வழியே தன்பாத் வரை இணைப்பு: ரயில்வே வாரியம் ஒப்புதல்

எழுதியவர்: அனிஷ் மாண்டல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்: நாடு முழுவதும் ரயில் இணைப்பை விரிவாக்குவதற்காக ஏழு புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸுக்கு இணையான பயண அனுபவத்தை வழங்குகின்றன, ஆனால் குறைந்த மற்றும் கீழ் - நடுத்தர வருவாய் பிரிவைச் சேர்ந்த பயணிகளுக்கு மலிவு விலையில் சேவை வழங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் படிக்க: தமிழ்நாட்டுப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. வந்தே பாரத் ரயில்களுக்கு இணையான சொகுசு வசதிகளுடன், குறைந்த மற்றும் கீழ்-நடுத்தர வருவாய் கொண்ட பயணிகள் மலிவு விலையில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி வழியாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் வரை இயக்கப்படவுள்ளது. முன்மொழியப்பட்ட அம்ரித் பாரத் ரயில் சேவைகளின் வழித்தடங்கள், திட்டமிடப்பட்ட நிறுத்தங்கள் மற்றும் பிற முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தன்பாத் - கோயம்புத்தூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் தன்பாத் - கோயம்புத்தூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 22363/22364) ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்த ரயில் சேவைக்கு பின்வரும் நிறுத்தங்கள் இருக்கும்: தன்பாத் சந்திப்பு, என்.எஸ்.சி போஸ் சந்திப்பு கோமோ, பரஸ்நாத், ஹசாரிபாக் ரோடு, கோடர்மா, கயா, அனுக்கிரகா நாராயண் ரோடு, டெஹ்ரி ஆன் சோன், சசாரம், பாபுவா ரோடு, பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா சந்திப்பு, மிர்சாபூர், பிரயாக்ராஜ் செவோகி, கட்னி, ஜபல்பூர், நரசிங்பூர், பிபரியா, இடார்சி, பெதுல், நாக்பூர், சந்திரபூர், பல்ஹார்ஷா, சிர்பூர் காகஸ்நகர், மஞ்சேரியல், பெத்தபல்லி, வாரங்கல், மஹபூபாபாத், கம்மம், விஜயவாடா, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர். பிரயாக்ராஜ் - லோக்மான்ய திலக் டெர்மினஸ் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் பிரயாக்ராஜ் - லோக்மான்ய திலக் (T) அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20436/20435) ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்த வாராந்திர சேவைக்கு பின்வரும் நிறுத்தங்கள் இருக்கும்: பிரயாக்ராஜ், சத்னா, ஜபல்பூர், இடார்சி, புசாவல் மற்றும் கல்யாண். பிரயாக்ராஜ் - உத்னா அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் பிரயாக்ராஜ் - உத்னா அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20437/20438) ரயிலை அறிமுகப்படுத்த தேசியப் போக்குவரத்து அமைப்பான ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்த வாராந்திர சேவைக்கு பின்வரும் நிறுத்தங்கள் இருக்கும்: பிரயாக்ராஜ், ஃபதேபூர், கோவிந்த்புரி, எட்டவா, துண்ட்லா, இத்கா ஆக்ரா, பயானா, ஹிண்டான் சிட்டி, கங்காபூர் சிட்டி, சவாய் மாதோபூர், கோட்டா, ராம்கஞ்ச் மண்டி, பவானி மண்டி, ரத்லாம், வதோதரா மற்றும் உத்னா. சுபேதார்கஞ்ச் - லோக்மான்ய திலக் டெர்மினஸ் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் சுபேதார்கஞ்ச் - லோக்மான்ய திலக் (T) அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 14121/14122) ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்த வாராந்திர சேவைக்கு பின்வரும் நிறுத்தங்கள் இருக்கும்: சுபேதார்கஞ்ச், ஃபதேபூர், கோவிந்த்புரி, பரூவா சுமேர்பூர், ரகௌல், பண்டா, சித்ரகூடதாம் கர்வி, சத்னா, மைஹார், கட்னி, ஜபல்பூர், நரசிங்பூர், பிபரியா, இடார்சி, கந்த்வா, புசாவல், நாசிக் ரோடு, கல்யாண் மற்றும் தானே. கோரக்பூர் - டெல்லி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் கோரக்பூர் - டெல்லி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 15095/15096) ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்த வாராந்திர சேவைக்கு பின்வரும் நிறுத்தங்கள் இருக்கும்: கோரக்பூர், கலீலாபாத், பஸ்தி, கோண்டா, புர்வால், சீதாபூர், பரேலி, மொராதாபாத், காசியாபாத் மற்றும் டெல்லி. கோரக்பூர் - பாந்த்ரா அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் கோரக்பூர் - பாந்த்ரா (T) அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 15085/15086) ரயிலை அறிமுகப்படுத்தவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்த வாராந்திர சேவைக்கு பின்வரும் நிறுத்தங்கள் இருக்கும்: கோரக்பூர், கலீலாபாத், பஸ்தி, கோண்டா, பாட்ஷாநகர், ஐஷ்பாக், கான்பூர் சென்ட்ரல், துண்ட்லா, ஆக்ரா கோட்டை, பயானா, கங்காபூர் சிட்டி, கோட்டா, பவானி மண்டி, ஷாம்கர், ரத்லாம், வதோதரா, சூரத், வல்சாத், வாபி, பால்கர், போரிவலி மற்றும் பாந்த்ரா (T). சார்லபல்லி - கோரக்பூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் சார்லபல்லி - கோரக்பூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 22075/22076) ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்த சேவைக்கு பின்வரும் நிறுத்தங்கள் இருக்கும்: சார்லபல்லி, காசிப்பேட்டை, பெத்தபல்லி, மஞ்சேரியல், பல்ஹார்ஷா, சந்திரபூர், நாக்பூர், பெதுல், இடார்சி, போபால், பீனா, வீராங்கனை லட்சுமிபாய் ஜான்சி, உரை, போகராயன், கான்பூர் சென்ட்ரல், ஐஷ்பாக், லக்னோ சிட்டி, கோமதி நகர், பாராபங்கி, கோண்டா மற்றும் கோரக்பூர்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கோவைக்கு புதிய அம்ரித் பாரத் ரயில்; சென்னை, ஜோலார்பேட்டை வழியே தன்பாத் வரை இணைப்பு: ரயில்வே வாரியம் ஒப்புதல்
PulseNews சுருக்கம்

நாடு முழுவதும் ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், புதிதாக ஏழு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் கோவை வழியாக தன்பாத் வரை செல்லும் புதிய ரயில், சென்னை மற்றும் ஜோலார்பேட்டை மார்க்கமாக இயக்கப்பட உள்ளது.

வந்தே பாரத் ரயில்களுக்கு இணையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பயணிகள் பயன்பெறும் வகையில், மலிவான கட்டணத்தில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business