PulseNews
வணிகம்

இருட்டு வீடு! மின்சாரத்துறை அமைச்சர் தொகுதியில் பரிதாபம்!

த ங்கள் வீட்டுக்கு மின்னிணைப்பு வாங்குவதற்காக கடந்த 17 ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் பனையூரை சேர்ந்த நந்தினி, வேல்முருகன் தம்பதியினரை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்தோம். "எங்க அப்பாவிற்கு சொந்தமான இடத்தில் ஒரு ஓட்டு வீடு கட்டி, மின் இணைப்பு கேட்டு 17வருடமாகக் காத்திருக்கேன். ஏதேதோ காரணம் சொல்லி இழுத்தடிக்கிறார்கள். எங்க பிள்ளைகள் தெருவிளக்கில்தான் படிக்கிறாங்க'' என்றவரிடம் அவரது வீட்டு முகவரியை கேட்டறிந்து நேரில் சென்றோம். பனையூர் கிராமத்தில் அவர்களின் வீட்டை அனைவரும் 'ஒத்த இருட்டு வீடு' என்று சொல்வதிலிருந்தே புரிந்துகொள்ள முடிந்தது. வீட்டின் வாசலில் இரண்டு குழந்தைகள் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்துக்கொண்டி ருந்தார்கள். அங்கிருந்த பெரியவரிடம் விசாரித்தபோது, "இந்த திருவள்ளுவர் காலனியில் மொத்தம் 46 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவற்றில் மின்சாரமில்லாத ஒரே குடும்பம் நந்தினியின் குடும்பம் மட்டுமே. இந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமெனில் மேலே செல்லக்கூடிய மிகவும் தாழ்வான மின்கம்பியை மாற்றி, கூடுதல் மின்கம்பம் மற்றும் மின் பாதை அமைக்க வேண்டிய நிலை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான செலவு அதிகமாகும் என்பதைக் காரணம்காட்டி, கடந்த 17 ஆண்டுகளாக இந்தக் குடும்பத்தின் கோரிக்கையை கிடப்பில் போட்டுட் டாங்க. ஒரு தொழில் நுட்பச் சிக்கலும், அதற்கான செலவும் ஒரு ஏழைக் குடும் பத்தின் வாழ்க்கையை 17 ஆண்டுகளாக இருளில் தள்ளிவிட்டுள்ளது'' என்றார். வேல்முருகனின் மனைவி நந்தினி நம்மிடம், "நாங்கள் பட்டிய லினத்தை சேர்ந்தவர்கள். 10ஆம் வகுப்பு படிக்கும் மகனும், 9ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ள னர். வீட்டில் மின்சாரம் இல்லாததால், தெருவிளக்கு வெளிச்சம், மெழுகுவர்த்தி வெளிச் சத்தில் தான் படித்து வர்றாங்க. மழை பெய்தாலும், தெரு விளக்கு அணைந் தாலும் இவங்க படிப்பும் நின்று விடுகிறது. இத் தனை சிரமங் களுக்கிடையி லும் நல்லா படிச்சு முதல் மாணவர்களா வர்றாங்க. கடந்த 17 ஆண்டுகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், மின்வாரிய அலுவலகம், ஊராட்சி நிர்வாகம் எனப் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு எண்ணற்ற முறை மனு அளித்தும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை'' என்று கண்ணீருடன் தெரிவிக்கிறார். மேலும் 2023-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததைத் தொடர்ந்து, வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் பட்டியல் சமூகக் குடும்பம் என்பதால், ஊராட்சி நிதியிலிருந்து மின் இணைப்புக்கான செலவை ஏற்கலாம் என பரிந்துரைக்கப்பட்டதாகச் சொன்னாங்க. ஆனால், அதற்கு அதிக செலவாகும் என்ற காரணத்தால் கிடப்பில் போட்டுட்டாங்க. மின்சார வாரிய அலுவலகத்தில் சில அதிகாரிகள் மின் இணைப்புக் காக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செல வாகும் என்றும், ஒரு அதிகாரி ரூ.10 ஆயிரம் கொடுத் தால் உடனே இணைப்பு வாங்கித் தருகிறேன் என்றும் சொல்றாங்க. அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்க போவோம்? அன்றாடக் கூலி வேலை செய்து வாழ்க் கையை நடத்தும் எங்களுக்கு அந்த அளவு தொகை யைச் செலுத்த வசதியில்லை'' என்கிறார் நந்தினி எனவே, அவர்களின் கனவும் கோரிக்கையும் கோப்புகளுக்குள் சிக்கிக் கிடக்கிறது இத்தனைக்கும் இந்தப் பகுதி, தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தொகுதிக்குட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சி, அடிப்படை வசதிகள் குறித்து பல திட்டங்கள் செயல்படுத்தப் படுவதாக அறிவிக்கப்படும் நிலையில், ஒரு பட்டியல் சமூகக் குடும்பம் மட்டும் 17 ஆண்டுகளாக மின்சாரமில்லாமல் வாழ வேண்டிய நிலை தொடர்வது பல கேள்விகளை எழுப்புகிறது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் மின்வாரிய இணை செயற்பொறியாளர் பாலமுருகனிடம் பேசினோம். "அவர் களின் வீட்டிற்கு பல வருடங்களாக மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்தது உண்மைதான். ஆனால் அவர்கள் வீட்டிற்கு மேலே உயர் அழுத்த மின் கம்பிவடம் செல்கிறது. அதற்கான ஈட்டுத்தொகையை அந்த வீட்டிற்கு சொந்தமானவர்கள் தான் கட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அதனால்தான் இந்த காலதாமதம்'' என்றவரிடம், "வேறொரு வருக்கு சொந்தமான விவசாய நில மோட்டாருக்கு போகும் மின் வடக்கம்பி எங்கள் வீட்டிற்கு மேல் செல்வதால் நாங்கள் ஏன் பணம் கட்டவேண்டும்? அது அரசோட வேலைதானே என்று கேட்கிறார்களே?'' என்றதும், "சட்டவிதி அப்படியிருக்கிறது. வேண்டுமென்றால், தாசில்தாரிடம் இவர்களால் பணம் கட்ட வசதியில்லை, மின்கம்பத்தை மாற்றுவதால் அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ் வாங்கிவரச் சொல்லியிருக்கோம். சான்றிதழ் வந்தால் கட்டாயம் மின்சாரம் தரப்படும்'' என்று உறுதியளித்தார். இதை அவர்களிடம் தெரிவித்துவிட்டோம். இரண்டு மாணவர்களின் கல்வி, ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு, இவர்களின் அடிப்படை உரிமை ஆகியவை 17 ஆண்டு களாக இருளில் மறைக்கப்பட்டிருப்பது தான் வேதனை! அந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாரும், மாவட்ட நிர்வாகமும், மின்வாரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இருட்டு வீடு! மின்சாரத்துறை அமைச்சர் தொகுதியில் பரிதாபம்!
PulseNews சுருக்கம்

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பனையூரைச் சேர்ந்த நந்தினி, வேல்முருகன் தம்பதியினர், கடந்த 17 ஆண்டுகளாகத் தங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி போராடி வருகின்றனர். தங்கள் பிள்ளைகள் தெருவிளக்கின் வெளிச்சத்தில் படிப்பதாகத் தெரிவிக்கும் இத்தம்பதியினர், பல்வேறு காரணங்களைக் கூறி மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர்.

தந்தைக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள ஓட்டு வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு நீண்டகாலமாகப் போராடி வரும் இவர்களின் நிலையை நேரில் சென்று பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சரின் தொகுதியிலேயே இத்தகைய அவலநிலை நீடிப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business