வாஸ்து குறிப்புகள் Ln.M. ஜெகநாதன் M.A.,B.Sc.,B.Ed.,
நா ம் வாங்கும் மனை சாலையைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும். தெற்கும் மேற்கும் உயர்ந்து கிழக்கு வடக்கும் தாழ்ந்திருக்கவேண்டும். மனை சதுரமாகவோ- செவ்வகமாகவோ இருக்க வேண்டும். முக்கோண வடிவில் இருக்கக்கூடாது. மனையின் அளவு அகலத்தைபோல் இரண்டு பங்குக்கு மேலாக நீளம் இருக்கவேண்டும். காம்பவுண்ட் சுவர் கட்டும்போது நான்கு பக்கமும் சமமான உயரத்தில் இருக்கலாம். கிழக்கு வடக்கு பகுதியிலுள்ள உயரம் மற்ற பகுதியைவிட உயர்ந்திருந்தால் மிகவும் நல்லது. காம்பவுண்ட் சுவர் வடகிழக்கு மூலை துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். காம்பவுண்டில் ஒன்று அல்லது இரண்டு கேட்டுகள் வைத்தல் நலம். காம்பவுண்ட் கேட் மெயின் தலைவாசலுக்கு எதிரில் ஒன்று இருக்கவேண்டும். காம்பவுண்ட் கேட் உள்பக்கமாக திறக்காமல் இருப்பது மிகவும் சிறப்பு. எந்த பக்கம் கட்டணும். வீடு கட்டினாலும் வடக்கு மற்றும் கிழக்கில் அதிக காலி இடம்விட வேண்டும். சமையலறை தென்கிழக்கு அதாவது- அக்னி மூலையில் கட்டப்பட வேண்டும். கிழக்கு பார்த்து நின்று சமைக்கும்படியாக இருக்க வேண்டும். தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைக்க முடியாது என்றபட்சத்தில் சமையலறையை வடவேற்கிலும் அமைக்கலாம். பூஜையறையை வடகிழக்கு மூலையில் அதாவது- ஈசான மூலையில் அதாவது- சனி மூலையில் அமைப்பது நல்லது. மெயின் பெட்ரூம் தென்மேற்கு மூலையிலும் வடமேற்கு மூலையிலும் அமைக்கலாம். தென்மேற்கு மூலையில் குடும்பத் தலைவன்- தலைவி உறங்குவது நல்லது. தூங்கும்போது தன் வீட்டில் கிழக்கிலும் பிறர் வீட்டில் மேற்கிலும் பயணம் போகும்போது தெற்கிலும் தலைவைத்து படுக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் வடக்கு பக்கம் தலைவைத்து படுக்கக் கூடாது. பணம், காசு வைக்கக்கூடிய பீரோவை வடமேற்கு மூலையில் கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ அமைக்கப்பட வேண்டும். வீட்டில் ஸ்டோர்ரூம் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைப்பது நல்லது. மனையின் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் போர் போட வேண்டும். தண்ணீர் தேக்கி வைக்கும் தரை மட்டத்திலுள்ள தொட்டி வடகிழக்கு மூலையில் அமைப்பதுதான் நல்லது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வடமேற்கு பகுதியில் வைக்கப்பட வேண்டும். மழைநீர் மொட்டை மாடியில் இருந்து கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் வழியும்படி அமைத்தல் நல்லது. இடிக்கப்பட்ட பழைய வீட்டிலுள்ள எந்த பொருளையும் புது வீட்டில் வைத்து கட்டக்கூடாது. செங்கல், ஜன்னல், வாசல் கால் எதையும் புது வீட்டில் வைப்பது நல்லது அல்ல. கழிவறையில் வடக்கு பக்கமாக அமரும்படி மலக்குழியை அமைக்க வேண்டும். வடகிழக்கு பகுதியிலும் தென்மேற்கு பகுதியிலும் கழிவறையோ, செப்டிக் டேங்கோ பாத்ரூமோ அமைக்கவே கூடாது. குளிக்கும்போது கிழக்கு பார்த்து அமர்ந்து குளிக்க வேண்டும். வீட்டிலுள்ள எல்லா கதவுகளும் உள்பக்கம் திறக்கும்படி அமைக்க வேண்டும். பாத்ரூம் கதவு மட்டும் வெளிப்பக்கம் திறக்கும்படியாக இருப்பது சிறப்பு. வீட்டிலுள்ள ஜன்னல்கள், நிலைக்கதவுகள் அனைத்தும் இரட்டை படையில் இருக்க வேண்டும். ஆனால் பூஜ்ஜியத்தில் முடியும்படியாக உள்ள இரட்டைபடியாக இருக்க கூடாது உதாரணம் 10 20 30. மாடிப்படி அமைக்கும்போது படிகள் ஒற்றைப்படையில் அமைக்க வேண்டும். மனையின் வடமேற்கு மூலையில் செப்டிக் டேங்க் அமைக்கப்பட வேண்டும். மனையின் வடகிழக்கு மூலையில் உயர்ந்த மரங்கள் வைக்கக்கூடாது. பூஜையறையில் வைக்கக்கூடிய சுவாமி, விளக்குகள் எண்ணெய் சூடம்பத்தி போன்றவை மட்டும்தான் வைக்கவேண்டும் பூஜையறையை ஸ்டோர் ரூம்போல் மாற்றக்கூடாது. தென்மேற்கு மூலையில் ஜன்னல் வைக்கவே கூடாது. வாஸ்து நாளில் பூஜை போட வேண்டும். வீடு கட்டும் மனையானது முன்பக்கம் பெரிதாகவும் பின்பக்கம் சிறிதாகவும் இருப்பது நல்ல மனை இல்லை. வடகிழக்கு மூலையான ஈசான மூலையில் படிக்கட்டுகள் அமைக்க கூடாது. வடகிழக்கு மூலையில் பாரம் ஏற்ற கூடாது. கார் நிறுத்தும் செட் கட்டக்கூடாது. தென்மேற்கு மூலையில் போர் தண்ணீர் தொட்டி, பள்ளம், லெட்டின் பாத்ரூம் இவற்றை அமைக்கக்கூடாது, வீட்டின் ஜன்னல்கள் வடக்கு பக்கமும் கிழக்குப் பக்கமும் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பாசிட்டிவ் எனர்ஜி வீட்டில் உள்ளே வரும். காம்பவுண்டில் ஒரு பக்கத்தில் அதிகபட்சமாக மூன்று கேட்டுகள் வைக்கலாம். மனை தெருக்கோடியில் இருக்கக்கூடாது. நான்கு மூலை சந்திப்பில் இருக்கக் கூடாது. தெருக்கூத்து இருக்கக்கூடாது. தலைவாசலுக்கு நேரே கார் செட் உரிய பெரிய கேட்டு வைக்க கூடாது. தலைவாசலுக்கு நேரே சின்ன கேட் அமைப்பது நலம். செல்: 94432 12632

நாம் வாங்கும் மனை சாலையின் மட்டத்தை விட உயர்ந்து இருப்பது சிறந்தது. மனை சதுர அல்லது செவ்வக வடிவில் மட்டுமே இருக்க வேண்டும், முக்கோண வடிவிலான மனைகளைத் தவிர்க்க வேண்டும். மனையின் நீளம், அதன் அகலத்தைப் போல் இரண்டு மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது.
தெற்கு மற்றும் மேற்கு திசைகள் உயர்ந்து, கிழக்கு மற்றும் வடக்கு திசைகள் தாழ்ந்து இருப்பது வாஸ்துப்படி உகந்தது. காம்பவுண்ட் சுவர்கள் நான்கு பக்கமும் சமமான உயரத்தில் இருக்கலாம்; எனினும், கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சுவர்கள் சற்று உயரமாக இருப்பது கூடுதல் சிறப்பு. காம்பவுண்ட் சுவரின் வடகிழக்கு மூலை துண்டிக்கப்படாமல் முழுமையாக இருக்க வேண்டும்.