PulseNews
வணிகம்

ஊராட்சி செயலாளர்கள் நேரடியாக நியமனம்: சட்டப்பேரவையில் அமைச்சர் என்.ஆனந்த் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ஆனந்த் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 13 மாவட்டங்களில் ரூ.206.75 கோடியில் 27 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் டி.என்.ஆர்.டி இணையதளம் மூலம் வெளிப்படையான முறையில் நேரடியாக நிரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் பட்ஜெட் மீது துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் புதன்கிழமை (19.08.2026) நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ம் ஆண்டுக்கான நீர்வளத்துறை அறிவிப்புகளை அமைச்சர் ஆனந்த் நேற்று வெளியிட்டார். அமைச்சர் ஆனந்த் வெளியிட்ட அறிவிப்புகளின் விவரம்: தமிழ்நாட்டின் நீர்வள மேலாண்மையை வலுப்படுத்துவதற்கு, முக்கிய ஆறுகளில் வெள்ள காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த 13 மாவட்டங்களில், 27 தடுப்பணைகள், ரூ.206 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.பயண வழிகாட்டிகளை வாசித்தல் ஏரிகள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் வழங்க 6 மாவட்டங்களில், 9 அணைக்கட்டுகள் ரூ.97 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். நீர்வளத்தை பாதுகாத்து பாசன பரப்புகளுக்கு தடையின்றி நீர் வழங்குவதை உறுதி செய்வதுடன், நீர் வீணாவதை தடுப்பதற்கு, நீர்வளத் துறையின் கீழ் ஏற்கனவே உள்ள பாசனக் கட்டமைப்புகளை பழுது பார்த்தல், புனரமைத்தல், மேம்படுத்துதல், புதுப்பித்தல் மற்றும் மறு கட்டுமானம் செய்தல் ஆகிய 96 பணிகள், 30 மாவட்டங்களில் ரூ.695 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் 19 மாவட்டங்களில், 49 வெள்ள தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் ரூ.218 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மாநிலத்தின் நிலையான வளர்ச்சிக்கும் நீர்வளப் பாதுகாப்பிற்கும், 25 மாவட்டங்களில், 207 பாசனக் கண்மாய்கள் மற்றும் ஏரிகளில் புனரமைப்பு, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் ரூ.280 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட 15 அறிவிப்புகளை வெளியிட்டார். கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் டி.என்.ஆர்.டி இணையதளம் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் நேரடி நியமனம் செய்யப்படும்” என்று அமைச்சர் ஆனந்த் அறிவித்தார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஊராட்சி செயலாளர்கள் நேரடியாக நியமனம்: சட்டப்பேரவையில் அமைச்சர் என்.ஆனந்த் அறிவிப்பு
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நீர்வள மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் என்.ஆனந்த் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக, 13 மாவட்டங்களில் 206.75 கோடி ரூபாய் செலவில் 27 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்து அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, இனி இப்பணியிடங்கள் டி.என்.ஆர்.டி (TNRT) இணையதளம் வாயிலாக வெளிப்படையான முறையில் நேரடியாக நிரப்பப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business