ஒரு விமானத்தில் இலங்கைக்கு வந்து சேர்ந்த 200 ஜப்பானிய சுற்றுலா பயணிகள்
200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழு ஒன்று, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரே விமானத்தில் இன்று இலங்கைக்குப் புறப்பட்டது. இது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான சுற்றுலா உறவுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கிறது. லிட்டில் ஜப்பான் குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் குழு, நரிட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL455 விமானத்தில் இலங்கைக்குப் பயணம் செய்தது. சிகிரியா எனும் பண்டைய நகரம் ஜப்பானுக்கான இல...

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL455 ரக விமானத்தில் 200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் இன்று இலங்கை வந்து சேர்ந்தனர். நரிட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்தச் சிறப்புப் பயணத்தை லிட்டில் ஜப்பான் குழுமம் ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான சுற்றுலாத்துறை உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த வருகை அமைந்துள்ளது. ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடங்களுள் ஒன்றாக சிகிரியா பண்டைய நகரம் திகழ்கிறது.