இலங்கை - வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!
இலங்கைக்கும் - வியட்நாமிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் எயார்லைன்ஸ் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் நேற்று (16) இரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானத்திற்கு பாரம்பரிய நீர் தாரை மரியாதை செலுத்தப்பட்டு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையே நேரடி விமான சேவைகளை வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதற்கான முதலாவது விமானம், நேற்று (16) இரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற ரகத்தைச் சேர்ந்த ஏர்பஸ் A-320 விமானத்திற்கு, விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி நீர் தாரை பீய்ச்சி அடிக்கப்பட்டு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.