PulseNews
வணிகம்

தமிழகத்தில் 14.43 லட்சம் விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி: உங்க பெயர் பட்டியலில் இருக்கா? இந்த ஆபீஸ் சென்று பாருங்க

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளின் ரூ.5,932 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான முழு பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக மட்டுமின்றி, உங்கள் கிராமத்தின் வி.ஏ.ஓ அலுவலகம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு நேரில் சென்றும் உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை எவ்வாறு சரிபார்ப்பது என்ற விவரங்கள் இதோ. தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை ரத்து செய்து மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளின் முழுமையான விபரங்கள் தற்போது வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2025 மே மாதம் முதல் 2026 பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் கடன் பெற்ற சுமார் 14 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர். மொத்தம் 5,932 கோடி ரூபாய் அளவிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பயனாளி ஒவ்வொருவரின் பெயர் மற்றும் அவர்களுக்கான தள்ளுபடி தொகை குறித்த இருவேறு மாவட்ட வாரியிலான பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்பட்டியல்கள் கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.kooturavu.tn.gov.in பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் இந்த இணையதள முகவரியைப் பயன்படுத்தித் தங்களின் கடன் தள்ளுபடி நிலையை ஆன்லைனில் எளிதாக அறிந்து கொள்ளலாம். அதேவேளையில், இணைய வசதி இல்லாத கிராமப்புற விவசாயிகள் பயன்பெறும் வகையில், அனைத்து கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) அலுவலகங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இப்பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள இந்த மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்களது பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம். தமிழக அரசின் இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்குப் பெரிய பொருளாதார நிம்மதியை அளித்திருக்கிறது. எனவே, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் உடனடியாகத் தங்களின் அருகிலுள்ள வி.ஏ.ஓ அலுவலகத்தையோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தையோ அணுகி, தள்ளுபடிப் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதிசெய்து பயன் பெறலாம்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழகத்தில் 14.43 லட்சம் விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி: உங்க பெயர் பட்டியலில் இருக்கா? இந்த ஆபீஸ் சென்று பாருங்க
PulseNews சுருக்கம்

தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளின் 5,932 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முழுமையான பயனாளிகள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை விவசாயிகள் ஆன்லைன் வாயிலாகச் சரிபார்க்கலாம். மேலும், தங்களின் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு நேரில் சென்றும் இதுகுறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business