தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களுக்கு ரயில்வே ஜாக்பாட்; ரூ.9,450 கோடியில் புதிய திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கும்மிடிப்பூண்டி - கூடூர் வழித்தடம் உட்பட 4 மாநிலங்களில் ரூ.9,450 கோடி மதிப்பில் 410 கி.மீ புதிய ரயில்வே திட்டங்களுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான விவரங்கள் இதோ. தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கி, இந்திய ரயில்வே கட்டமைப்பை 410 கி.மீ அளவுக்கு விரிவுபடுத்தும் 4 முக்கியத் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.9,450 கோடி மதிப்பிலான இத்திட்டங்கள் மூலம் 6,448 கிராம மக்கள் பயனடைவதுடன், ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கான ரயில் இணைப்புகளும் பெருமளவில் மேம்படவுள்ளன. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மத்திய அமைச்சரவைக் குழு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய ரயில்வே அமைச்சகத்தின் ரூ. 9,450 கோடி மதிப்பிலான 4 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்கள் 2030-31 ஆம் ஆண்டிற்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரகக்பூர் – பத்ரக் (ராணிதால): 4-வது ரயில் பாதை – 173 கி.மீ. (மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா) பத்ரக் – ஹரிதாஸ்பூர்: 4-வது ரயில் பாதை – 75 கி.மீ. (ஒடிசா) கும்மிடிப்பூண்டி – கூடூர்: 3 மற்றும் 4-வது ரயில் பாதைகள் – 90 கி.மீ. (ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு) கட்டாக் – பாரதீப் (படாபந்தா): 3 மற்றும் 4-வது ரயில் பாதைகள் – 72 கி.மீ. (ஒடிசா) திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்: வலைப்பின்னல் விரிவாக்கம்: மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டங்கள் மூலம் இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 410 கி.மீ. அதிகரிக்கும். பயனீட்டாளர்கள் பயன்: சுமார் 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஏறத்தாழ 6,448 கிராமங்களுக்கான ரயில் போக்குவரத்து இணைப்பு மேம்படும். பிஎம் गति சக்தி திட்டம்: இத்திட்டங்கள் ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சரக்கு போக்குவரத்துத் திறன் மற்றும் பலமுனை இணைப்பை மேம்படுத்தும் வகையில் பிஎம் கதி சக்தி தேசியப் பெருந்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளன. சுற்றுலா மேம்பாடு: குள்டிஹா வனவிலங்கு சரணாலயம், பிதார்கனிகா தேசிய பூங்கா, பழவேற்காடு (புலிகேட்) ஏரி, நெலப்பட்டு பறவைகள் சரணாலயம், திருவெவ்வள்ளூர் (திருவள்ளூர்) அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோவில் உள்ளிட்ட பல முக்கிய ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கான இணைப்பு வசதி மேம்படும். பொருளாதார வளர்ச்சி: நிலக்கரி, இரும்புத் தாது, சிமெண்ட், எஃகு, தானியங்கள் மற்றும் வாகனங்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்திற்கு இவை மிக முக்கியமான வழிகளாக அமைவதோடு, ஆண்டிற்கு 76 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்திற்கு வழிவகுக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு: இத்திட்டங்களின் மூலம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி பெருமளவு குறைவதுடன் (13 கோடி லிட்டர்கள்), சுமார் 65 கோடி கிலோ கார்பன்-டை- ஆக்ஸைடு உமிழ்வு தடுக்கப்படும். இது 2.60 கோடி மரங்களை நடுவதற்குக் சமமான நன்மையைத் தரும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 410 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தக் கூட்டத்தில், இதற்காக 9,450 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது மேற்கூறிய 4 மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்களில் ரயில்வே கட்டமைப்பை விரிவுபடுத்தும் வகையில் அமையும். இதில் கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையிலான வழித்தடமும் அடங்கும்.