மீனவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் அ.தி.மு.க அன்பழகன் கோரிக்கை
மீனவர்களுக்கு தொகைக்கு ஏற்ப 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டு புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் சந்தித்து புதுச்சேரி தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் மனு கொடுத்தார். இந்திய அரசின் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறை மத்திய அமைச்சர் ராஜூவ் ரஞ்சன் சிங் புதுச்சேரிக்கு வருகை தந்தார். அவரை வரவேற்று தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகிறார்கள். மாநில அரசு மீனவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருந்தாலும் அவர்களுடைய வாழ்வாதாரம் உயர்வடையவில்லை. அவர்கள் தங்களை பழங்குடி இன பட்டியலில் சேர்க்க நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது புதுச்சேரி அரசு மீனவ சமுதாய மக்களுக்கு இரண்டு சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி வருகிறது. அது மீனவ சமுதாய மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற ஒதுக்கீடாக இல்லை. மீனவ மக்களின் தொகைக்கு ஏற்ப 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அவர்களுக்கு வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க வழிவகுக்கும். இவ்விரு கோரிக்கைகளையும் நிறைவேற்றி மீனவ சமுதாய மக்களின் வாழ்வு மேலோங்க வழிவகை செய்ய வேண்டும் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.

புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கை, தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில் மீனவர் சமூகத்தினரின் நலனை கருத்தில் கொண்டு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த உள் ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.