PulseNews
வணிகம்

'அமேசானுக்கே விபூதி அடித்த லட்டு கம்பெனி'- அயோத்தி ராமர் பிரசாதம் என ஜூ லா லா

இணையவழி வர்த்தகம் உலகளவில் மக்களின் அன்றாடத் தேவைகளை எளிதாக்கியுள்ள போதிலும், அதில் நடைபெறும் வணிக முறைகேடுகளும் ஏமாற்று வேலைகளும் தொடர்ந்து நுகர்வோருக்குப் பெரும் சவாலாகவே அமைந்துள்ளன. குறிப்பாக, மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளையும் மத உணர்வுகளையும் மூலதனமாக்கி, போலியான விளம்பரங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இத்தகைய வணிக ஏமாற்று வேலைகளைத் தடுத்து, நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு எடுக்கும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது இணையதளப் பக்கத்தில் சாதாரண இனிப்பு வகைகளை 'அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்' என்ற பெயரில் தவறாக வழிநடத்தும் வகையில் விற்பனை செய்ய அனுமதித்ததற்காக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடமிருந்து எந்தவொரு முறையான அனுமதியோ அல்லது அங்கீகாரமோ பெறாமல், சாதாரண இனிப்புகளைப் பிரசாதம் என அமேசான் விற்பனை செய்ததே இந்த நடவடிக்கைக்குக் காரணமாகும். மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் நிதி கரே மற்றும் ஆணையர் அனுப்பம் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தத் தொகையை 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் 'பீகார் பிரதர்ஸ்' என்ற பிராண்டின் கீழ் 'சந்து டிரேடிங் கம்பெனி' என்ற நிறுவனம் நெய் லட்டு, கோவா லட்டு, பூந்தி லட்டு மற்றும் பசு மாட்டுப் பால் பேடா ஆகிய நான்கு வகையான இனிப்புகளைப் பட்டியலிட்டு விற்பனை செய்து வந்தது. இந்த விளம்பரங்களில் மத ரீதியிலான ஆன்மீகப் படங்களைப் பயன்படுத்தி, அயோத்தி ஸ்ரீராமர் கோவிலின் ஆசீர்வாதம் பெற்றது என்றும், அதன் மூலப்பொருள் பகுதியில் ராமர் கோவில் பிரசாதம் என்றும் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பக்தர்கள் பொதுவாக ஸ்ரீ ராமர் கோவில் அயோத்தி பிரசாதம் என்ற வார்த்தையைக் பார்த்த உடனே, அது இறைவனுக்குப் படைக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட புனிதமான உணவுப் பொருள் என்றே நம்புவார்கள் என்று நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. முறையான அனுமதி இல்லாமல் சாதாரண இனிப்புகளுக்குப் பிரசாதம் என்ற புனிதமான சொற்றொடரைப் பயன்படுத்துவது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தவறான நடைமுறை மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான நுகர்வோரின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும் என்றும் ஆணையம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில், தாங்கள் வெறும் இடைத்தரகர் மட்டுமே என்பதால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ன் கீழ் தங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது என்ற அமேசானின் வாதத்தை ஆணையம் நிராகரித்துள்ளது. அமேசான் நிறுவனம் அத்தகைய போலியான விளம்பரங்களைத் தனது தளத்தில் காட்சிப்படுத்தி, அதன் விற்பனையை எளிதாக்கியதால், தவறான விளம்பரப் பிரசுரத்திற்கு அந்த நிறுவனமும் ஒரு கூட்டுப் பொறுப்பாளிதான் என நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய த்தின் உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'அமேசானுக்கே விபூதி அடித்த லட்டு கம்பெனி'- அயோத்தி ராமர் பிரசாதம் என ஜூ லா லா
PulseNews சுருக்கம்

அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் என்ற பெயரில் போலியான லட்டு விற்பனை செய்யப்பட்டு அமேசான் நிறுவனத்திற்கே மோசடி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை வணிகத்திற்காக தவறாகப் பயன்படுத்துவதை வெளிப்படுத்துகின்றன.

ஆன்லைன் வர்த்தகத்தில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகள் நுகர்வோருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன. மத உணர்வுகளை மூலதனமாக்கிப் போலியான விளம்பரங்கள் மூலம் பொருட்களை விற்கும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business