PulseNews
வணிகம்

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு: வணிகத்திற்கு அதிர்ச்சி, வீட்டுக்கு நிம்மதி! பின்னணி என்ன?

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலைகளை மாற்றி அமைக்கும். அந்த வகையில் செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலைகளை மாற்றி அமைத்துள்ளன. அந்த வகையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன. இந்த இரண்டின் விலைகளையும் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி அன்று மாற்றி அமைக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் இன்று கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 10.50 ரூபாய் உயர்ந்து, 2,916.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி 957.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஈரான் போர் கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. இதனால் ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடை பட்டு எல்பிஜி விநியோகம் குறைந்துள்ளது. இந்தியா தனக்கு தேவையான 70% எல்பிஜி-ஐ வளைகுடா நாடுகளில் இருந்து தான் வாங்குகிறது.

ஆனால் கடந்த 6 மாதங்களாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எல்பிஜி விநியோகம் பெருமளவில் நின்று போயுள்ளது. இந்தியா தற்போது அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து எல்பிஜி வாங்கி வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையை உயர்த்திய வண்ணம் உள்ளன. இதனால் ஹோட்டல், டீக்கடை, மெஸ் போன்றவற்றை நடத்துவோர் கடும் சிரமம் அடைந்துள்ளனர். சிலிண்டர் விலை உயர்வால் டீ, ஹோட்டல் உணவு , மெஸ் உணவுகளின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மீண்டும் இவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு: வணிகத்திற்கு அதிர்ச்சி, வீட்டுக்கு நிம்மதி! பின்னணி என்ன?
PulseNews சுருக்கம்

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றங்களை மேற்கொள்வது வழக்கம். அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதியான இன்று சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன.

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் தற்போதைய விலை நிலவரம் என்ன என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business