JCB வாங்க EMI: வாடகைக்கு விட்டு மாசாமாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்- இதோ திட்டம்!

ஜேசிபி (JCB) எனப்படும் புல்டோசர்கள் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு மட்டுமின்றி, கட்டுமானம், விவசாயம், மற்றும் பொருட்களை ஏற்றுவது, இறக்குவது உள்ளிட்ட பல்வேறு கடினமான பணிகளுக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சாதாரண வாகனங்களை விட இதன் விலை பல மடங்கு அதிகம் என்பதால், முழு தொகையையும் ஒரே முறையில் செலுத்தி வாங்குவது அனைவருக்கும் சாத்தியமில்லை. எனவே, வாடகைக்கு விட்டு பிசினஸ் மூலம் வருமானம் ஈட்ட நினைப்பவர்கள், பெரும்பாலும் வங்கி கடன் மற்றும் மாதத் தவணை முறையையே தேர்வு செய்கின்றனர்.

விலை, வடிவமைப்பு

கரடுமுரடான சூழல்களிலும் தொடர்ந்து இயங்கும் வகையில் மிகவும் வலுவான கட்டமைப்புடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.பொதுவாக JCB 3DX Super மாடலின் விலை சுமார் ₹34 லட்சம் முதல் ₹36 லட்சம் வரை உள்ளது. மாடல், இடம் மற்றும் டீலர்களைப் பொறுத்து இந்த விலை மாறுபடும்.

முன்பணம் எவ்வளவு?

ஒரு ஜேசிபி புல்டோசரின் விலை ₹34 லட்சம் என வைத்துக்கொண்டால், வாடிக்கையாளரின் தகுதியைப் பொறுத்து வங்கி 90% நிதியுதவி அளிக்கும். அதன்படி, ₹30.60 லட்சம் வரை வங்கிக் கடனாகப் பெறலாம். மீதமுள்ள 10% தொகையான ₹3.4 லட்சத்தை வாங்குபவர் முன்பணமாகச் செலுத்த வேண்டும். வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் நிதி நிலையைப் பொறுத்து கடன்தொகை மாறுபடும்.

இஎம்ஐ எப்படி?

9% வட்டி விகிதத்தில் ₹30.60 லட்சம் கடன் பெற்றால், எவ்வளவு இஎம்ஐ கட்ட வேண்டும் என்று காணலாம்.

5 ஆண்டு கடன்: மாதம் சுமார் ₹63,521. (தவணை அதிகம் என்றாலும், கடன் விரைவாக முடியும்).

6 ஆண்டு கடன்: மாதம் சுமார் ₹55,200.

7 ஆண்டு கடன்: மாதம் சுமார் ₹49,300. மாதத் தவணை குறைந்தாலும், வட்டிச் சுமை அதிகரிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

வருமானம் எப்படி?

கட்டுமான தளங்கள், சாலை அமைத்தல் போன்றவற்றுக்கு இதனை மணிநேர அடிப்படையிலோ, வேலை அடிப்படையிலோ வாடகைக்கு விடலாம். ஆனால், இஎம்ஐ தவிர்த்து டீசல் செலவு, ஆபரேட்டர் சம்பளம், பராமரிப்பு, சர்வீஸ் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற பல செலவுகளும் உள்ளன.

எனவே, மாதம் எத்தனை நாட்கள் வாகனம் ஓடும், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைத் தெளிவாகக் கணக்கிட்ட பிறகே வாங்கும் முடிவை எடுக்க வேண்டும். வாடிக்கையாளரின் நிதிநிலையைப் பொறுத்து வங்கியின் வட்டி விகிதமும், கடனுக்கான நிபந்தனைகளும் மாறுபடலாம்.

கட்டுமானம், விவசாயம் மற்றும் சரக்குகளைக் கையாளுதல் போன்ற பல்வேறு கடினமான பணிகளுக்கு ஜேசிபி இயந்திரங்கள் பெரிதும் பயன்படுகின்றன. சாதாரண வாகனங்களை விட இவற்றின் விலை மிக அதிகம் என்பதால், முழு தொகையையும் கொடுத்து வாங்குவது பலருக்கு சவாலான விஷயமாக உள்ளது.
இந்தத் தடைகளைத் தவிர்க்க, தவணை முறையில் (EMI) ஜேசிபி இயந்திரங்களை வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வாங்கிய இயந்திரங்களை வாடகைக்கு விடுவதன் மூலம், மாதம் தோறும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் வாய்ப்பு பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது.