PulseNews
வணிகம்

'சமையல் எண்ணெய் முதல் பிஸ்கட் வரை'- எகிறப்போகும் விலைவாசி

மேற்காசியப் போர் ஏற்படுத்திய மூலப்பொருள் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, மக்களின் அன்றாட வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை உயர்த்த முன்னணித் தயாரிப்பு நிறுவனங்கள் நைசாக காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சமையல் எண்ணெய், மாவு வகைகள், சோப், பிஸ்கட், ஷாம்பூ மற்றும் பேக் செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அடுத்த சில வாரங்களில் கணிசமாக உயரப்போவ தாகக் கூறப்படுகிறது . இதற்கு முக்கியக் காரணமாக, தற்போது சர்வதேச அளவில் நீடித்து வரும் மேற்காசியப் போர்ச் சூழல் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த போர் பதற்றத்தால் உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் முதல் சர்க்கரை மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. இதனால் உற்பத்திச் செலவு பன்மடங்கு அதிகரித்துவிட்டதாகக் கார்ப்பரேட் நிறுவனங்கள் கை விரிக்கின்றன. ஏற்கனவே இதே காரணத்தை முன்வைத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்தத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பொருட்களின் விலையை 2 முதல் 5 விழுக்காடு வரை உயர்த்தியிருந்தன. இந்தநிலையில், தற்போதைய புதிய விலை உயர்வு நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'சமையல் எண்ணெய் முதல் பிஸ்கட் வரை'- எகிறப்போகும் விலைவாசி
PulseNews சுருக்கம்

மேற்காசியப் போர் காரணமாக மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. சமையல் எண்ணெய், பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ, மாவு வகைகள் மற்றும் பேக் செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளின் விலை அடுத்த சில வாரங்களில் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் மேற்காசியப் போர் சூழலே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business