PulseNews
வணிகம்

“தவெக குதிரை பேரம் மூலம் விலை பேசுகிறது” - அக்ரி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கூட்டத்தொடரின் 6ஆம் நாளான இன்று (11-08-26) நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்று மாதங்களில் இந்த அரசின் சாதனை என்னவென்றால் அது குதிரை பேரம் தான் என்று தவெக அரசை குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஜெயலலிதாவின் அதிமுக உண்மையான அதிமுக என்றும் தமிழகத்தின் நலனுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சரண்டர் ஆனதாகவும், அவரின் தலைமை மீது நம்பிக்கை இல்லாததால் தான் அதிமுகவினர் தவெகவில் இணைவதாகவும் பேசினார். இதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூச்சலிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், குதிரை பேரம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவித்தார். இந்த நிலையில், தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என அதிமுக கொறடாவும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கையில் வைத்த மை காய்வதற்கு முன்பாக அவர்களை குதிரை பேரத்தின் மூலமாக விலை பேசி தமிழக வெற்றிக் கழகத்திற்கு இழுத்தவர்கள், தவெகவின் அமைச்சர்கள் என்பது நாடறியும், மக்களும் அறிவார்கள், தொகுதி மக்களும் அறிவார்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதுகெலும்பு மிக்க ஒரு தலைவராக பரிணாமம் பெற்று அதிமுகவை திறமையாக வழிநடத்தி சென்றுக் கொண்டிருக்கிறார். அதிமுகவிற்கு தனிக் கொள்கைகள் இருக்கிறது. எந்த முடிவெடுத்தாலும் தமிழக மக்களின் நலன் சார்ந்த முடிவுகளை மட்டுமே எடப்பாடி பழனிசாமி எடுப்பார். யாருக்கும் அடிபடுகின்ற இயக்கம் அதிமுக அல்ல. பொதுச் செயலாளர் தொண்டர்களையும் இயக்கத்தையும் காப்பாற்றுகின்ற தலைவர்” எனத் தெரிவித்தார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“தவெக குதிரை பேரம் மூலம் விலை பேசுகிறது” - அக்ரி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான விவாதத்தின் ஆறாவது நாள் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்று மாதங்களில் தவெக அரசு குதிரை பேரம் மூலம் விலை பேசி வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதிமுக பொதுச்செயலாளரின் இந்த கருத்துக்குப் பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளித்து பேசினார். இந்த விவாதம் அவை நடவடிக்கைகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business