PulseNews
வணிகம்

RATION CARD : ரேஷன் கார்டில் பெயரை தூக்க போறாங்க.! இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க- வெளியான முக்கிய அறிவிப்பு

ரேஷன் கார்டில் உணவுப்பொருட்கள் விநியோகம்

தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த அட்டைகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் பல இடங்களில் ரேஷன் அட்டையில் போலியான பெயர்களை சேர்த்தும், போலியான ரேஷன் கார்டுகள் மூலமாகவும் உணவுப்பொருட்கள் வாங்கி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் நாடு முழுவதும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆதார் எண்ணோடு ரேஷன் அட்டையானது இணைக்கப்பட்டுள்ளது. எனவே ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் நியாயவிலைக்கடைக்கு சென்று தங்களது கை விரல் ரேகையை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் கை விரல் ரேகை பதிவு

கடந்த 3 ஆண்டுகளாக கை விரல் (eKYC) சரிபார்க்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்காக பல கட்ட சிறப்பு முகாமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டையில் பெயர் இருப்பவர்கள் தங்களது கை விரல் ரேகையை ரேஷன் கடையில் பதிவு செய்யப்படவில்லையென்றால் ரேஷன் அட்டையில் இருந்து அந்த நபர்களின் பெயர்கள் நீக்கப்படும். இந்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை ஏதும் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரி பார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

விரல் ரேகை சரிபார்ப்பு பணி

அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 29.08.2026 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 29 ஆம் தேதி - கை ரேகைப் பதிவு சிறப்பு முகாம்

எனவே, இன்று வரை, நியாயவிலைக் கடைகள் மூலம் கை ரேகைப் பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் வருகின்ற 29.08.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கை ரேகைப் பதிவினை (eKYC பதிவினை) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
RATION CARD : ரேஷன் கார்டில் பெயரை தூக்க போறாங்க.! இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க- வெளியான முக்கிய அறிவிப்பு
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன.

இருப்பினும், போலி ரேஷன் கார்டுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் முறையற்ற பெயர்கள் சேர்க்கப்பட்டு உணவுப் பொருட்கள் பெறப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, ரேஷன் கார்டுகளில் உள்ள தேவையற்ற பெயர்களை நீக்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business