சேர்த்த பணத்தில் வாழ்க்கையை அனுபவிக்க முடியலையா? செலவுகளுக்கு SWP பயன்படுத்துவது எப்படி?
மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் SWP என்பது, நீங்கள் விரும்பும் தொகையை குறிப்பிட்ட இடைவெளியில் (மாதம்/ஆண்டு) உங்கள் வங்கி கணக்கிற்குத் தானாகவே வரவழைக்கும் ஒரு வசதி. தேவையான யூனிட்கள் மட்டும் விற்கப்பட்டு, மீதித் தொகை தொடர்ந்து முதலீட்டிலேயே வளர்ந்துகொண்டிருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள எஸ்பிபி (SWP) வசதியைப் பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் தங்களுக்குத் தேவையான தொகையை மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் வங்கி கணக்கிற்குத் தானாகவே வரவழைத்துக்கொள்ள முடியும். இது ஓய்வுக்காலத்திலோ அல்லது பிற தேவைகளுக்கோ நிதி கிடைப்பதை எளிதாக்குகிறது.
இந்த முறையில் முதலீட்டாளரின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு பணம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள முதலீட்டுத் தொகை தொடர்ந்து சந்தையில் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதால், நிதித் திட்டமிடலுக்கு இது பயனுள்ளதாக அமைகிறது.