“எட்டுக் கோடி மக்களும் என் மக்கள் தானே” - முதல்வர் விஜய்!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு 100 நாட்கள் ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக, “ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” என்ற தலைப்பில் முதலமைச்சர் விஜய்யின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், வீடியோவுடன் கூடிய பதிவுகளை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ஜோசப் விஜய் எனும் நான்... வாங்க, எல்லாரும் சேர்ந்து ஒரு பிரஷ் கவனன்ஸ்... ஒரு நியூ கவனன்ஸ் ஒன்று கொடுப்போம்... இது புதிய தொடக்கம்... புதிய சகாப்தம்... பெண்கள் பாதுகாப்பை ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக வைத்திருப்பேன். போதைப் பொருள் கலாச்சாரத்திலிருந்து நம்ம பசங்களைக் காப்பாற்ற வேண்டியது நம்ம அரசினுடைய பொறுப்பு. கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், பஸ் இந்த மாதிரி விஷயங்களில்தான் என்னுடைய முழு முதல் கவனம். இது உங்களுடைய ஆட்சி. உங்களுக்கு அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். இந்த நேரத்தில் இதைத்தான் சொல்லணும். அரசியலுக்கு வந்த உங்க விஜய்... “விஜய் தம்பி, விஜி தம்பி, அண்ணா நீ வா... நண்பா நீ வா... நண்பா நாங்களெல்லாம் இருக்கோம்” என்று சொல்லி, அவ்வளவு உறவாக என்னை ஏத்திக்கிட்டீங்க. எட்டு கோடி மக்களும் என் மக்கள் தானே. கான்ஃபிடென்ட்டாக இருங்க” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தனது ஆட்சிக் காலத்தின் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு, 'ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என்ற தலைப்பில் முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், புதிய தொடக்கம் மற்றும் புதிய சகாப்தத்தை நோக்கி அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், எட்டு கோடி மக்களும் தனது மக்கள் என்று குறிப்பிட்ட அவர், பெண்களின் பாதுகாப்பை மிகவும் உறுதியாகவும் கவனமாகவும் உறுதி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.