Chennai News Live Updates: மேகதாது அணை விவகாரம் - த.வெ.க அரசுக்கு எதிராக அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலை நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.100.27-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு - பா.ஜ.க கண்டனம் வெளிநாட்டுத் தலைவர்களை கட்டிப் பிடிப்பதையே, பிரதமர் மோடி வெளியுறவுக் கொள்கையாக நினைப்பதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இத்தாலி பிரதமர் மெலோனியில் பெயரை குறிப்பிட்டு பகடி செய்த சம்பவத்திற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கை நிறுத்தம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு சென்னையில் சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது, சொத்து வரி மதிப்பீட்டை மாற்றியமைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தற்போது நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகப மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் நியமனம் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக தாரகை கத்பர்ட், துணை தலைவராக ஜமால் முகமது யூனூஸ், செயலாளராக பிரவீன் எம்.எல்.ஏ. நியமனம் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும், பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலையில் இன்று சற்று உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 107.76 ரூபாய்க்கும், டீசல் 100.27 ரூபாய்க்கும், ஒரு கிலோ சிஎன்ஜி எரிவாயு 97.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.