PulseNews
வணிகம்

Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?

வீட்டில் நிலவிய பண பிரச்னை தான் தன்னை சினிமாவுக்குள் அழைத்து வந்ததாக நடிகர் சூர்யா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். மமிதா பைஜூ, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதியான நாளை வெளியாகிறது. இந்த படத்துக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் சூர்யா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துக்காக நடிகர் சூர்யா பலவிதமான ப்ரோமோஷன்களில் கலந்து கொண்டுள்ளார். அதில் ஒரு நேர்காணலில் தான் நடிக்க வந்த கதையைப் பற்றி பேசியுள்ளார்.

கார்த்தி மாதிரி நான் இல்லை

நான் ஒரு நடிகனாவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. கார்த்தி எப்போதும் சினிமாவில் ஒரு அங்கமாக இருக்க விரும்பினான். நான் கேமரா முன் நிற்கப் போகிறேன் என்பது ஷூட்டிங் செல்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் எனக்குத் தெரிய வந்தது. இதற்காக நான் எந்தவித முன் தயாரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை. கேமரா முன் நின்ற பிறகு தான் எல்லாம் கற்றுக் கொண்டேன். ஆனால் நாளடைவில் அது பொறுப்பாக மாறியது என தெரிவித்துள்ளார்.

கடன் பிரச்னையால் நடிக்க வந்த சூர்யா

மேலும் என்னுடைய வீட்டில் நிதி பிரச்னைகள் இருந்தது. இதன் காரணமாக நான் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் மூலம் கிடைக்கும் பணத்தை சம்பாதித்து என் அம்மாவுக்கு கொடுக்க நினைத்தேன்.
நான் ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். நாளடைவில் எனது மாத சம்பளம் ரூ.1,200 ஆக உயர்ந்தது. வேலையை விட்டு வெளியேறும் சமயத்தில் என் சம்பளம் ரூ.8 ஆயிரமாக உயர்ந்தது.

ஆனால் என் அம்மா, அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இந்த விஷயம் எனக்கு தெரிந்த பிறகு என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். என் அப்பா நடிகராக இருந்தபோதும் நாங்கள் பொருளாதார பிரச்னையை எதிர்கொண்டோம். எங்கள் வங்கிக் கணக்கில் ஒன்றரை லட்சத்திற்கு மேல் இருந்ததே இல்லை. என் அப்பா சம்பளம் கேட்டு வற்புறுத்தியதும் இல்லை. அது வரும்போது வரட்டும் என சொல்வார். மேலும் என் அப்பா தொடர்ச்சியாக வேலை செய்ய மாட்டார். அதுவே நான் என்ன செய்துக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்தியது என சூர்யா தெரிவித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
PulseNews சுருக்கம்

தனது குடும்பத்தில் நிலவிய நிதி நெருக்கடியே தன்னை திரையுலகிற்கு அழைத்து வந்ததாக நடிகர் சூர்யா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். தனது தந்தை சிவகுமாருக்குத் தெரியாமல், குடும்பத்திற்காகத் தாய் கடன் வாங்கிய சூழலை அவர் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படம் நாளை ஆகஸ்ட் 14-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business