20 கி.மீ தூரத்திற்குள் வசித்தால் டோல் கட்டணம் இல்லையா, ஐடி கார்டு மட்டும் போதுமா? NHAI கொடுத்த விளக்கம்
தேசிய நெடுஞ்சாலையில் டோல் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக NHAI முக்கியமான விளக்கத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. இதன்மூலம் 20 கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிப்போருக்கு டோல் கட்டணம் இருக்கிறதா, இல்லையா என்பதற்கு பதில் கிடைத்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் 20 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிப்பவர்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விளக்கம் அளித்துள்ளது. இந்தத் தகவல் சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுங்கச் சாவடிக்கு அருகிலேயே வசிப்பவர்களுக்குக் கட்டண விலக்கு உண்டா என்பது குறித்த குழப்பத்திற்குத் தெளிவான பதில் கிடைத்துள்ளது. அடையாள அட்டை காண்பித்தால் மட்டும் போதுமா அல்லது இதர நடைமுறைகள் என்ன என்பது குறித்த விரிவான விளக்கத்தை NHAI அளித்துள்ளது.