PulseNews
வணிகம்

ரூ.350 கட்டணத்தில் வழங்கப்படும் பாஸ்டேக் உள்ளூர் பாஸ் வசதி; நாடு முழு​வதும் 121 சுங்​கச்​சாவடிகளுக்கு விரிவாக்கம்..!

ரூ.350 கட்டணத்தில் வழங்கப்படும் பாஸ்டேக் உள்ளூர் பாஸ் வசதி 121 சுங்கச் சாவடிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பில் இது குறித்து தெரி​வித்​துள்​ள​தாவது: தகு​தி​யுள்ள சுங்​கச்​சாவடி​யில் இருந்து 20 கி.மீ. சுற்​றளவுக்​குள் வசிக்​கும் உள்​ளூர் மக்​களின் வசதிக்​காக, டிஜிட்​டல் உள்ளூர் பாஸ் வழங்​கப்​படு​கிறது. இந்​தப் பாஸைப் பயன்​படுத்​தி, சம்​பந்​தப்​பட்ட சுங்​கச்​சாவடியை அந்த மாதம் முழு​வதும் விதி​முறை​களுக்கு உட்​பட்டு எத்​தனை முறை வேண்​டு​மா​னாலும் வாக​னங்​களில் கடந்து செல்​லலாம் என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன், மாதம் ரூ.350 முதல் கிடைக்​கும் இந்த பாஸ், ஒரே சுங்​கச்​சாவடியை வழக்​க​மாகக் கடந்து வேலைக்​குச் செல்​வோர், தினசரி தேவை​களுக்​காகப் பயணம் செய்​வோர் மற்​றும் தொடர்ந்து பயணம் மேற்​கொள்​வோருக்கு மிக​வும் பயனுள்​ள​தாக இருக்​கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஜிட்​டல் பாஸ் வசதி முதன்​முதலில் கடந்த ஜூலை மாதம் டெல்​லி​யில் உள்ள முந்த்கா பக்​கர்​வாலா என்ற சுங்​கச்​சாவடி​யில் அறி​முகப்​படுத்​தப்​பட்​ட நிலை​யில், தேசிய நெடுஞ்​சாலைத் துறை ஆணை​யம் தற்​போது இந்த வசதியை நாடு முழு​வதும் 121 சுங்​கச்​சாவடிகளுக்கு விரிவுபடுத்​தி​யுள்​ளது. இந்த விரிவுபடுத்தப்பட்​டுள்ள 121 சுங்​கச்​சாவடிகளில் மட்​டுமே இந்தப் பாஸ் வசதி கிடைக்​கும் வகையில் உள்ளது. ஆகையால், பொது​மக்​கள் தங்​கள் பகு​தி​யில் உள்ள சுங்​கச்​சாவடி டிஜிட்​டல் பாஸ் வசதி​யில் இடம்​பெற்​றுள்​ளதா என்​பதை முதலில் அறிந்து கொள்ள வேண்​டும் என்றும், இந்த வசதியை பெற ராஜ்மார்க்யாத்ரா என்ற செயலி மூலம் விண்​ணப்​பிக்​கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய நெடுஞ்​சாலைகளில் பயணம் செய்​வதை பொது​மக்​களுக்கு எளி​தான​தாக​வும், வசதி​யான​தாக​வும் மாற்​றும் நோக்​கில் இந்​தத் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. முன்பு இந்த பாஸ் பெற விரும்​பிய​வர்​கள் சம்​பந்​தப்​பட்ட சுங்​கச்​சாவடிக்கு நேரில் சென்​று, தாங்​கள் 20 கி.மீ. சுற்​றளவுக்​குள் வசிப்​பவர்​கள் என்​பதை நிரூபிக்​கும் ஆவணங்​களைச் சமர்ப்​பிக்க வேண்​டி​யிருந்​தது. அனால், இந்த புதிய டிஜிட்​டல் முறை மூலம் இந்த ஆவணப் பணி​கள் குறைக்​கப்​பட்​டு, விண்​ணப்ப நடை​முறை விரை​வாக​வும் வெளிப்​படை​யாக​வும் மாற்​றப்​பட்​டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ரூ.350 கட்டணத்தில் வழங்கப்படும் பாஸ்டேக் உள்ளூர் பாஸ் வசதி; நாடு முழு​வதும் 121 சுங்​கச்​சாவடிகளுக்கு விரிவாக்கம்..!
PulseNews சுருக்கம்

ரூ.350 கட்டணத்தில் வழங்கப்படும் பாஸ்டேக் உள்ளூர் பாஸ் வசதி நாடு முழுவதும் 121 சுங்கச் சாவடிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

தகுதியுள்ள சுங்கச் சாவடியைச் சுற்றியுள்ள 20 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் உள்ளூர் மக்கள், இந்த டிஜிட்டல் பாஸைப் பயன்படுத்தி ஒரு மாதம் முழுவதும் அந்தச் சாவடியைக் கடந்து செல்ல முடியும்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#business