PulseNews
வணிகம்

'சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு'-சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சியில் ஒரு சில இடங்களில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது எந்தவித காரணமும் இல்லாமலும், முன்னறிவிப்பும் இல்லாமலும் திடீரென சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக சென்னைவாசிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். சென்னையில் 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்க்கு மறுமதிப்பீடு செய்யப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் வரி செலுத்துபவர்கள் குழப்பம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகர் மேயர் பிரியா செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், “சொத்து வரி உயர்வு குறித்து எங்களிடம் அரசு கலந்தாலோசிக்கவில்லை. இந்த அறிவிப்பு வெளியிட்டது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று கூறி இருந்தார். இந்த நிலையில் பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகளை கவனமாக ஆய்வு செய்து அதன்படி சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு'-சென்னை மாநகராட்சி முடிவு
PulseNews சுருக்கம்

சென்னை மாநகராட்சியில் சில பகுதிகளில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வரி உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

சுமார் 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு வரி மறுமதிப்பீடு குறித்த அறிவிப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business