PulseNews
வணிகம்

Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..

மீண்டும் உயரும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த 2 ஆண்டில் மட்டும் புதிய உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களை தலை சுற்றவைத்தது. 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் புதிய உச்சமான 1.34 லட்சத்தை ஒரு சவரன் எட்டியது. எனவே இந்தாண்டு இறுதிக்குள் தங்கம் சவரன் ஒன்றுக்கு 2 லட்சத்தை எட்டும் என நகைவியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கத்திற்கு பதிலாக முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது தங்களது முதலீட்டை அதிகரித்த காரணத்தால் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது.

தங்கம் விலை உயர காரணம் என்ன.?

அந்த வகையில் ஒரு சவரன் 1.34 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலையானது அடுத்த ஒரு சில மாதங்களில் அதிரடியாக குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஈரான்- அமெரிக்கா இடையே போர் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், தங்கத்தின் விலையானது மீண்டும் உயர தொடங்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு சவரன் 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

எகிறும் தங்கம் விலை

ஆகஸ்ட் 11-ம் தேதி காலையில் அதிகரித்த தங்கம் விலை, மாலையில் குறைந்தது. அந்த வகையில், ஒரு கிராம் 14,150 ரூபாய்க்கும், சவரன் 1,13,200 ரூபாய்க்கும் விற்பனை.

ஆகஸ்ட் 12-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 13-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 14,220 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,13,760 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலையில் கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் குறைந்து 14,040 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை- மாலையில் கிராம் ஒன்றிற்கு 160 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நேற்று காலையில் இறங்கிய நிலையில் மாலையில் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகரித்து 14,220 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 1,13,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளி விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
PulseNews சுருக்கம்

சுதந்திர தினத்தை முன்னிட்டும் தங்கம் விலை குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் 1.34 லட்சம் ரூபாயை எட்டியது. இந்த ஆண்டு இறுதிக்குள் சவரன் விலை 2 லட்சத்தை எட்டும் என்று நகை வியாபாரிகள் கணித்துள்ளனர். இருப்பினும், ஈரான் - அமெரிக்கா இடையிலான போரினால் முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business