“ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் இருக்கிறது” - நீட் அனிதா குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வரும் சூழலில், துறை ரீதியான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று அறிவுப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்று (01-09-26) கைத்தறி, தொழிலாளர் நலன், குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்த விவாதத்தின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, “இன்றைய நாள் தங்கை அனிதாவின் நினைவு நாள். மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் மருத்துவப் படிப்பிற்கான கட் ஆஃப் 196.75 மதிப்பெண் பெற்றிருந்தாலும் அன்றைக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட 86 மதிப்பெண் பெற்றிருந்தார். ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அவர், தன்னுடைய கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று அதில் வெற்றி பெற முடியாத போது நமது தந்தை அனிதா உயிரிழந்தார். அன்றிலிருந்து இன்று வரை பலி தொடர்ந்து கொண்டிருக்கிறது. நமது மாநில 3 முதல்வர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய முதல்வர் விஜய் ஆகிய 3 பேரும் இதே சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினாலும் இன்று வரை ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் இருக்கிறது. அண்ணா கனவு கண்ட இருமொழி கொள்கை, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்காக நாம் போராடியிருக்கிறோம். ஆனால், நாம் எல்லோரும் சேர்ந்து நீட்டுக்கு எதிரான போராட்டத்தை வரக்கூடிய காலங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்டு எடுக்க வேண்டும். 2029இல் தேர்தல் சூழ்நிலைகள் மாறும்போது சட்டமன்றத்தில் ஒலிக்கும் நமது முதல் குரல் நீட்டுக்கு எதிராக இருக்கும். தங்கை அனிதா நினைவு நாளான இன்று உறுதிமொழி எடுத்துச் சொல்கிறோம், இந்த நீட்டை பாராளுமன்றத்தில் தூக்கி எறியப்பட்ட நாளாக மாறும். அந்த ஒரு நாளுக்காக அனிதாவின் தியாகம், உழைப்பு, கண்ணீர், உணர்வை தவெக உள்பட அனைத்து கட்சிகளும் அவருக்கு நினைவை செலுத்துகிறோம். மாணவர்கள் நம்பிக்கையாக இருங்கள், உறுதியாக இருங்கள்... இன்னொரு உயிர் போகக்கூடாது.. இந்த உயிரிழப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் அரசியல் சூழ்நிலைகள் மாறும். தங்கை அனிதாவின் கண்ணீருக்கான விடையைத் தேடி நாம் அரசியலை மேற்கொள்வோம். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து உச்ச நீதிமன்றம் வரை போராடி அந்த வாசலில் நின்று பேட்டி கொடுத்தது என்பது சாதாரண விஷயம் அல்ல. அனிதா தான் இந்த பிரச்சனைய இந்தியா முழுவதும் கொண்டு சென்ற முதல் பெண். அவருடைய கனவு ஒரு நாள் நினைவேறும்” என்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஒரு மாதமாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன்தொடர்ச்சியாக, கைத்தறி, தொழிலாளர் நலன் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு இன்று விவாதம் நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்த சூழலில், நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த அனிதா குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிடும்போது, ஒன்றிய அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.