இந்தியா-ரஷ்யா இடையே நேரடி ரயில் பாதை; இத்தனை நாடுகளை இணைக்கிறதா?
இந்தியாவுக்கு நேரடி ரயில் பாதையை அமைக்க ரஷ்யா முன்மொழிந்துள்ளது. இந்த திட்டத்திற்கான சாத்தியமான வழித்தடத்தை ரஷ்யத் துணைப் பிரதமர் மராட் குஸ்னுல்லின் விவரித்துள்ளார். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் இந்தியா இடையிலான தரைவழித் தொடர்பு வலுப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பிரபல செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “போஸ்பரஸ் மற்றும் ஹார்முஸ் நீரிணை உள்ளிட்ட முக்கியமான கடல் வழித்தடங்களுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க, ரஷ்யா மாற்று வழித்தடங்களை ஆராய வேண்டும். இந்தியாவுக்கான அணுகலை வழங்கும் எந்தவொரு வாய்ப்பையும் ரஷ்யா பரிசீலிக்கும்” என்று தெரிவித்தார். குறிப்பிடப்பட்ட சாத்தியமான அந்த வழித்தடம் ரஷ்யாவிலிருந்து தொடங்கி, துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாகச் சென்று இந்தியாவை அடையும். இருப்பினும், இது தற்போதைக்கு ஒரு முன்மொழிவு மட்டுமே. ரஷ்யா-இந்தியா இடையிலான பயணிகள் ரயில் சேவை, வழித்தடம், பயணக் கட்டணம் அல்லது தொடக்கத் தேதி ஆகியவை குறித்து இன்னும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இத்திட்டத்தின் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையே தரைவழித் தொடர்பு ஏற்பட்டால், எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கும் இது வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நேரடி ரயில் பாதையை அமைப்பதற்கான திட்டத்தை ரஷ்யா முன்மொழிந்துள்ளது. இந்த வழித்தடம் ரஷ்யாவில் தொடங்கி, துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியாவை சென்றடையும் என்று ரஷ்யத் துணைப் பிரதமர் மராட் குஸ்னுல்லின் தெரிவித்துள்ளார்.
கடல்வழிப் போக்குவரத்தில் உள்ள அபாயங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த மாற்று தரைவழித் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. இருப்பினும், இது தற்போதைக்கு ஒரு முன்மொழிவு மட்டுமே என்பதால், ரயில் சேவை, பயணக் கட்டணம் அல்லது திட்டத் தொடக்கம் குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.