PulseNews
வணிகம்

ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்

இந்திய ரயில்வேயில் வேலை தேடும் இளைஞர்களுக்கும், பொறியியல் பட்டதாரிகளுக்கும் ஒரு மிகச் சிறந்த வேலைவாய்ப்புச் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் நாடு முழுவதும் காலியாக உள்ள 4,098 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள தேர்வர்கள் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்களின் விவரங்கள்

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் மொத்தம் 4,098 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer), இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, டிப்போ மெட்டீரியல் சூப்பரண்டன்ட் மற்றும் கெமிக்கல் அண்ட் மெட்டலர்ஜிக்கல் அசிஸ்டென்ட் ஆகிய முக்கிய பணியிடங்கள் அடங்கும். மண்டலங்கள் வாரியான விரிவான காலிப்பணியிட அறிவிக்கை விரைவில் வெளியாகும்.

கல்வித் தகுதி

ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற தொடர்புடைய பொறியியல் துறைகளில் டிப்ளமோ அல்லது பி.இ/ பி.டெக் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சில குறிப்பிட்ட பணியிடங்களுக்கு இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களில் பி.எஸ்சி முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

வயது வரம்பு விவரம்

ஜனவரி 1 2027 அன்று விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 33 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு இட ஒதுக்கீடு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எவ்வளவு ஊதியம்

இந்தக் காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின்படி ஆரம்ப அடிப்படை மாதாந்திர சம்பளமாக ரூ. 35,400 வழங்கப்படும். இது தவிர அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப் படி உள்ளிட்ட இதர சலுகைகளும் ரயில்வே துறையால் வழங்கப்படும்.

தேர்வு முறை மற்றும் கட்டணம்

விண்ணப்பதாரர்கள் கணினி வழியிலான முதல் நிலைத் தேர்வு, இரண்டாம் நிலைத் தேர்வு, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் இறுதியாக மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.250 கட்டணமாகும். தகுதியானவர்கள் RRB-யின் மண்டல இணையதளங்கள் மூலமாக ஆகஸ்ட் 14 முதல் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இதற்கு செப்டம்பர் 13ஆம் தேதி வரை கடைசித் தேதி ஆகும்.

விரிவான அறிவிக்கை விரைவில் வெளியாகும் நிலையில், அப்டேட்டுகளுக்கு ரயில்வே இணையதளத்தைக் காணவும்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

Abp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business