PulseNews
வணிகம்

தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா... களத்தில் இறங்கிய விஜய்; டி.கே. சிவகுமார் உடன் சந்திப்பு?

கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீர் தமிழ்நாட்டில் கடை கோடியில் இருக்கும் விவசாயிகள் வரை அனைவருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது. இந்த நீர் ஆதாரத்தை பொறுத்தவரை காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஏற்கனவே இருந்த தி.மு.க அரசும், தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் த.வெ.க அரசும் இந்த அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வங்க தேசத்துக்கு பெரிய ஆஃபர்... இந்தியா நிலைமை ரொம்ப மோசம்; டிரம்ப் அரசின் புதிய வரி விதிப்பு மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்பே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் காவிரி நதி நீர் ஆணையம் அமர்வு பேசும்போது, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்பதை தீர்க்கமான முடிவாக வைத்திருந்தனர். கர்நாடகாவில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழல் இருப்பதாகவும், தண்ணீர் தேக்கம் குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேசுவதற்கு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி விஜய், கர்நாடகா செல்ல இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை வழங்குமாறு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business