மியான்மரில் புத்த மடாலயம் தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு
நேபிடா, மியான்மரின் மத்திய பகுதியில் உள்ள சாகைங் பிராந்தியத்தில் புத்த மடாலயம் மீது ராணுவ விமானம் நடத்திய வான்தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். மியாங் நகரில் இருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்வெல் லே ஓ(Swel Le Oh) என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள புத்த மடாலயத்தில் ஒரு வார கால தியான நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த [...] The post மியான்மரில் புத்த மடாலயம் தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

மியான்மரின் சாகைங் பிராந்தியத்தில் உள்ள ஸ்வெல் லே ஓ கிராமத்தில் இருந்த புத்த மடாலயம் மீது, ராணுவ விமானம் நடத்திய வான்தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
மியாங் நகரில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த மடாலயத்தில், 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஒரு வார கால தியான நிகழ்ச்சி நடைபெற்று வந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.