PulseNews
உலகம்

நேபாள வெள்ளம்: 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் தவிப்பு!

கோலாலம்பூர்: நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, அங்குள்ள 50-க்கும் மேற்பட்ட மலேசியப் பயணிகளை அவர்களது குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளதாகக் கத்மண்டூவில் உள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது. தொடர்புச் சேவை உள்கட்டமைப்புகள் (Communication infrastructure) கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், 50-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று, கத்மண்டூவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் பொறுப்பாளர் முகமட் பிர்தவ்ஸ் அஸ்மான் தெரிவித்துள்ளார். காணாமல் போன தங்களது உறவினர்கள் அல்லது [...] The post நேபாள வெள்ளம்: 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் தவிப்பு! appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Makkal Osai15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, அங்கு சுற்றுலா சென்ற 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். கத்மண்டூவில் உள்ள மலேசியத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் நிலவும் இயற்கை பேரிடரால் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள மலேசியர்களின் தற்போதைய நிலை குறித்த தகவல்களைத் திரட்டுவதில் பெரும் சிரமம் நீடிப்பதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மூலம்: Makkal OsaiMakkal Osai-இல் முழு செய்தியைப் படிக்க →
#world