நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?

இந்த பூமியில், மனிதர்களின் வரலாற்ற நாம் எழுத வேண்டும் என்றால், 2024க்கு முன், 2024க்கு பின் என்றுதான் எழுதவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சூழலியல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இதில் நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களும் மாட்டிக் கொண்டுள்ளனர். இதில் தொடர்புடையவர்களை மீட்க இந்திய அரசும் தமிழக அரசும் அவசர மீட்பு எண்களை அறிவித்துள்ளன.

இந்த நிலையில், பனிமலைகளால் ஏற்பட்ட பெருவெள்ளமே இந்த பேரழிவுக்குக் காரணம் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது:

பனிமலை பெரு வெள்ளம்

நேபாளத்தில் நடைபெற்ற “GLOF” , அதாவது பனிமலைகளினால் ஏற்பட்ட ஏரியில் இருந்து ஏற்பட்ட வெடிப்பு ஏற்படுத்திய பெரு வெள்ளம் அந்த நாட்டை புரட்டிப் போட்டுள்ளது. இது ஏன் நிகழ்ந்தது, இதற்கான காரணங்கள் என்ன என்பது முக்கியம்.

இந்த பெரு வெள்ளம் ஏற்படுத்திய துயரம், எல்லோரையும் நிலைகுலையச் செய்துவிட்டது. இதுவரை எவ்வளவு மனித உயிர்களை நாம் இழந்திருப்போம் என தெரியாது, 100 தமிழர்களை காணவில்லை என தரவுகள் சொல்கின்றன.

கட்டுமானங்களில் பிரச்சினையா?

இதுவரை 19 பெரிய பாலங்கள் உடைந்து நொறுங்கிவிட்டன, 40 கி.மீ. சாலைகள் காணாமல் போய்விட்டன, 13 புனல் மின் நிலையங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இவையனைத்தும் தவறான இடத்தில், தவறான வகையில் கட்டப்பட்ட கட்டுமானங்கள்.  மேற்சொன்னவற்றை கட்டியது எல்லாம் பொறியாளர்கள்தான்,

இமய மலைகள் காலத்தால் மிகவும் இளமையான மலைத் தொடர்கள், அதனால் அங்கே எந்த மாதிரியான கட்டுமானங்களை கட்டவேண்டும், எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்தவேண்டும் என்பதெல்லாம் நமக்கு தெரியும்.

கட்டுமானங்களை காப்பி அடிப்பதா?

ஆனால் அமெரிக்காவின் மலைகளை பாருங்கள், சீனாவின் மலைகளை பாருங்கள் என்று மற்ற இடங்களில் நடைபெற்ற கட்டுமானங்களை காப்பி அடிக்க எடுத்த முடிவின் விளைவே இந்த துயரம். அதோடு இப்போது உலகம் “மனிதர்களால் உந்தப்ப்ட்ட யுகத்திற்குள்” (அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை) செல்ல ஆரம்பித்து விட்டது.

இந்த பூமியில் மனிதர்களின் வரலாற்ற நாம் எழுத வேண்டும் என்றால், 2024க்கு முன், 2024க்கு பின் என்றுதான் எழுதவேண்டும். இந்த காலகட்டத்தில் “Climate Resilient Infrastructure” என்பது மட்டுமே நமக்கு தேவை! Rest can wait! உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பனிமலை வெள்ளப் பாதிப்புகள், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் ஒரு முக்கிய எச்சரிக்கையாக மாறியுள்ளன. இந்த நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு புதிய மற்றும் சவாலான அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.
2024-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தை விட, தற்போதைய இயற்கை பேரிடர்கள் மனிதகுல வரலாற்றை மறுவரையறை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. இந்த சூழல் எதிர்கால சந்ததியினருக்கான வரலாற்றுப் பதிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.