ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?

பெரிய குடும்பம் உள்ளவர்கள் 20 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் ஒரு புதிய மற்றும் சிறந்த 7 சீட்டர் கார் வாங்க நினைத்தால், அதற்காக இப்போது சந்தையில் பல்வேறு தரமான தேர்வுகள் உள்ளன.

இந்த விலை வரம்பில் தற்போது விற்பனையாகும் கார்கள் பயணிகளுக்கு சிறப்பான இருக்கை இடவசதி, சொகுசு, அதிநவீன அம்சங்கள் மற்றும் மிகச் சிறந்த சாலை அனுபவத்தை வழங்குகின்றன. என்றாலும், நீங்கள் கார் வாங்கும் முன் உங்களது அன்றாடப் பயன்பாடு, மைலேஜ், சர்வீஸ் செலவுகள் மற்றும் பெட்ரோல்-டீசல் விருப்பங்களை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமாகும்.

சரி வாங்க, இப்போ பெஸ்ட் 7 சீட்டர் கார்களின் பட்டியலை காணலாம்.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் 2.4-லிட்டர் GX வேரியண்ட் விலை ரூ.19 முதல் ரூ.19.32 லட்சம் வரையிலும், GX ப்ளஸ் வேரியண்ட் விலை ரூ.20.83 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக சக்திவாய்ந்த டீசல் இன்ஜின், மிகச் சிறந்த மறுவிற்பனை மதிப்பு மற்றும் நம்பகமான செயல்திறன் இதை பிரீமியம் எம்பிவி பிரிவில் பிரபலமாக்குகிறது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு பிரீமியம் அனுபவத்திற்கு டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் GX பெட்ரோல் மாடல் ரூ.19.53 லட்சத்திற்கும், GX(O) மாடல் ரூ.20.97 லட்சத்திற்கும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த கார் லிட்டருக்கு அதிகபட்சமாக 23 கி.மீ மைலேஜ் தந்து, தன் பிரிவில் மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை கொண்ட வாகனமாகத் திகழ்கிறது.

மஹிந்திரா XUV700

மஹிந்திரா XUV700 காரின் ஆரம்ப விலை சுமார் ரூ.15 லட்சமாகும். இதன் உயர் மாடல்கள் 20 லட்சத்திற்குள் பிரீமியம் உட்புறம், ADAS எனப்படும் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பு பாதுகாப்பு வசதி மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின்களுடன் கிடைக்கிறது. இது அதிக அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ஆகும்.

கியா கேரன்ஸ்

கியா கேரன்ஸ் மாடல் சுமார் ரூ.15 லட்சம் எக்ஸ்-ஷோரூம் பட்ஜெட்டில் தொடங்குகிறது. சுமார் ரூ.20 லட்சத்தில் கிடைக்கும் இதன் டாப் மாடல்களில் பிரீமியம் கேபின், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் மேம்பட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா ஸ்கார்பியோ என்

மஹிந்திரா ஸ்கார்பியோ என் மாடலின் Z8 டீசல் வேரியண்ட் சுமார் ரூ.19.30 லட்சத்தில் கிடைக்கிறது. பிரீமியம் உட்புறம், சன்ரூஃப் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின் ஆகியவை இணைந்து இதை 20 லட்ச பட்ஜெட்டில் மிகச் சிறந்த சொகுசு எஸ்யூவி போட்டியாளராக மாற்றுகிறது.

டாடா சஃபாரி கார்

ரூ.20 லட்சத்திற்குள் பிரீமியம் எஸ்யூவி தேடுவோருக்கு டாடா சஃபாரியும் ஒரு சிறந்த தேர்வாகும். இதன் தைரியமான வடிவமைப்பு மற்றும் வலுவான பாதுகாப்பு ரேட்டிங், வாடிக்கையாளர்களுக்கு சொகுசு உணர்வுடன் நம்பகமான செயல்திறனையும் தருகிறது.

கவனிக்க வேண்டியவை

வெறும் 7 சீட்டர் என்பதற்காக மட்டுமே ஒரு காரை வாங்குவது சரியான முடிவாக இருக்காது. மாறாக, 3-வது வரிசை இருக்கை வசதி, காரின் டிக்கி அளவு, மைலேஜ், சர்வீஸ் செலவு, பாதுகாப்பு வசதிகள் மற்றும் உங்கள் அன்றாடத் தேவைகளை முழுமையாகக் கருத்தில் கொண்டு வாங்குவதே மிகவும் சிறந்தது.

20 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் பெரிய குடும்பத்தினருக்கான சிறந்த 7 இருக்கை கொண்ட கார்கள் சந்தையில் பல தேர்வுகளில் கிடைக்கின்றன. இவை பயணிகளுக்குத் தேவையான விசாலமான இடவசதி, சொகுசு வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் சிறந்த பயண அனுபவத்தை வழங்குகின்றன.
புதிய கார் வாங்கத் திட்டமிடும்போது, உங்கள் தேவைக்கேற்ப பல்வேறு தரமான கார்களில் இருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது அவசியம். இந்த விலை வரம்பில் உள்ள கார்கள் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.