Yamaha E Scooters: ஒரே சார்ஜில் 169 கி.மீட்டர் மைலேஜ்... யமஹாவின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? ஓர் அலசல் மக்களே

இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் யமஹா மிகவும் முக்கியமான ஒன்றாகும். யமஹா நிறுவனத்திற்கு என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. யமஹா நிறுவனமும் இ ஸ்கூட்டர்கள் தயாரித்து வருகிறது. அவர்களின் இ ஸ்கூட்டர்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. யமஹா நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1. Yamaha EC 06:

யமஹா நிறுவனத்தின் Yamaha EC 06 இ ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும். இதில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரத்து 979 ஆகும். இதில் 4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 169 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 79 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

இந்த இ ஸ்கூட்டரில் நார்மல், எகோ, பவர் மோட்கள் உள்ளது. முன்பக்கம், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 132 கிலோ எடை கொண்டது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை எடை கொண்டது. ப்ளூடூத் வசதி கொண்டது.

2.Yamaha Aerox E:

யமஹா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான இ ஸ்கூட்டர்களில் ஒன்று Yamaha Aerox E. இந்த இ ஸ்கூட்டரில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 2 லட்சத்து 91 ஆயிரத்து 875 ஆகும். 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தாலே 117 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 95.5 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

139 கிலோ எடை கொண்டது. 48 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. நார்மல், எகோ, பவர் மோட்கள் உள்ளது. முன்பக்கம், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

யமஹா நிறுவனத்தின் இந்த இ ஸ்கூட்டர்களுக்கு இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. யமஹாவின் ஸ்கூட்டர்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்திய இருசக்கர வாகன சந்தையில் முன்னணி நிறுவனமான யமஹா, தனது மின்சார ஸ்கூட்டர்களுக்காக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வரும் சூழலில், இந்நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ள முக்கிய இ-ஸ்கூட்டர்கள் குறித்து இங்கு காணலாம்.
யமஹாவின் ஈசி 06 (EC 06) ஸ்கூட்டர் 4 கிலோவாட் பேட்டரியுடன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 169 கி.மீ மைலேஜ் தருகிறது. இதன் விலை ரூ. 1,75,979 ஆகும். அதேபோல், ரூ. 2,91,875 விலையிலான ஏராக்ஸ் இ (Aerox E) மாடல் 3 கிலோவாட் பேட்டரியுடன், ஒருமுறை சார்ஜ் செய்தால் 117 கி.மீ மைலேஜும், 95.5 கி.மீ அதிகபட்ச வேகமும் வழங்குகிறது. இரண்டு மாடல்களிலும் ப்ளூடூத், டிஸ்க் பிரேக் மற்றும் அலாய் சக்கரங்கள் போன்ற நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.