பெங்களூருவில் பார்க்கிங் விதியை கடுமையாக்கத் திட்டம்..!
பெங்களூருவில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தினால் ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க முடிவு செய்து அதற்கான முன் மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. சாலைகளை ஏ,பி,சி என வகைப்படுத்தி அதன் அடிப்படையில் ஒவ்வொரு சாலைகளிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புகளை ஒட்டிய சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு எஸ்.யு.வி கார்களுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய், செடான் ரக கார்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் சிறிய ரக ஹேட்ச்பேக் கார்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வசூலிக்க முடிவு செய்து இதுகுறித்து 30 நாட்களில் கருத்து தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெங்களூருவில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, புதிய கட்டண முறையைக் கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நகரத்தின் சாலைகளை ஏ, பி மற்றும் சி என வகைப்படுத்தி, வாகன நிறுத்துமிடங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு, காரின் வகையைப் பொறுத்து ஆண்டுதோறும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதன்படி, எஸ்.யு.வி கார்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், செடான் கார்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், சிறிய ஹேட்ச்பேக் கார்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.