Budget EMI Cars: ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான EMI-யில் கிடைக்கும் 10 கார்கள் - விலை, வட்டி, தவணை - முழு விவரம்

Budget EMI Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒரு ரூபாய் கூட முன்பணம் செலுத்தாமல் சொந்தமாக்க வாய்ப்புள்ள சில கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

மாதாந்திர தவணைக்கான பட்ஜெட் விவரங்கள்:

புதிய காரை வாங்குவது என்பது பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமான முடிவாகும். சரியான முடிவை மேற்கொள்ள கவனமான பரிசீலனை மற்றும் முறையான நிதி திட்டங்கள் அவசியமாகின்றன. நீங்கள் கடுமையான நிதி சிக்கலுக்கு மத்தியில் 10 ஆயிரத்திற்கும் குறைவான மாதாந்திர தவனை திட்டத்தில் ஒரு காரை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? இந்த எளிய நிதி திட்டத்தில் இந்தியாவில் வாங்க வாய்ப்புள்ள 10 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதேநேரம், இந்த பிரிவில் கிடைக்கு பெரும்பாலான தேர்வுகளானது எண்ட்ரி லெவல் ஹேட்ச்பேக், சில காம்பேக்ட் எஸ்யுவிக்களை மட்டுமே அடக்கியுள்ளது. காரின் ஆன் - ரோட் விலை, டவுன்பேமண்ட் மற்றும் வட்டி விகிதத்தை கொண்டு பயனருக்கான மாதாந்திர தவணை தொகை மாறுபடும்.

மாதாந்திர தவணைக்கான கணக்கீடு:

மாதந்திர தவணை தொகையை கணக்கிட, 60 மாதங்கள் அதாவது 5 ஆண்டுகளுக்கு 9 சதவிகித வட்டியை எடுத்துக்கொண்டோம். அதோடு, டவுன் பேமண்ட் என்பது மாதாந்திர தவணை தொகையை 10 ஆயிரம் ரூபாய்க்குள் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக கார் மாடலின் ஆன் - ரோட் விலைக்கு ஏற்ப மாறுபடும். அதேநேரம், உண்மையான மாதாந்திர தவணை திட்டம் என்பது கடன் வழங்குபவர், பயனரின் சிபில் ஸ்கோர், பதிவுக்கடணம், காப்பீடு திட்டம் மற்றும் பேசிக்குறைக்கப்பட்ட காரின் விலை மற்றும் உங்களது நகரம் ஆகியவற்றை சார்ந்து மாறுபடும் என்பதை கவனித்தில் கொள்ளுங்கள்.

ரூ.10,000 மாத தவணையில் கிடைக்கும் 10 கார்கள்:

மாடல்கள்

தொடக்க எக்ஸ் ஷோரூம் விலை

தோராயமான ஆன்-ரோட் விலை

தோராயமான முன்பணம்

கடன் தொகை

EMI @ 9%, 60 மாதங்கள்

மாருதி ஆல்டோ கே10

ரூ 3.70 லட்சம்

ரூ 4.14 லட்சம்

0

ரூ 4.14 லட்சம்

ரூ 8,600

மாருதி எஸ்-ப்ரஸ்ஸோ

ரூ 3.50 லட்சம்

ரூ 3.92 லட்சம்

0

ரூ 3.92 லட்சம்

ரூ 8,100

ரெனால்ட் க்விட்

ரூ 4.53 லட்சம்

ரூ 5.07 லட்சம்

ரூ 25,000

ரூ 4.82 லட்சம்

ரூ 10,000

டாடா டியாகோ

ரூ 4.69 லட்சம்

ரூ 5.25 லட்சம்

ரூ 43,000

ரூ 4.82 லட்சம்

ரூ 10,000

மாருதி செலேரியோ

ரூ 4.70 லட்சம்

ரூ 5.26 லட்சம்

ரூ 44,000

ரூ 4.82 லட்சம்

ரூ 10,000

மாருதி வேகன்ஆர்

ரூ 4.99 லட்சம்

ரூ 5.59 லட்சம்

ரூ 77,000

ரூ 4.82 லட்சம்

ரூ 10,000

மாருதி ஈக்கோ

ரூ 5.23 லட்சம்

ரூ 5.86 லட்சம்

ரூ 1.04 லட்சம்

ரூ 4.82 லட்சம்

ரூ 10,000

ஹுண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்

ரூ 5.60 லட்சம்

ரூ 6.27 லட்சம்

ரூ 1.45 லட்சம்

ரூ 4.82 லட்சம்

ரூ 10,000

ஹுண்டாய் எக்ஸ்டர்

ரூ 5.80 லட்சம்

ரூ 6.50 லட்சம்

ரூ 1.68 லட்சம்

ரூ 4.82 லட்சம்

ரூ 10,000

ஹுண்டாய் ஆரா

ரூ 6 லட்சம்

ரூ 6.72 லட்சம்

ரூ 1.90 லட்சம்

ரூ 4.82 லட்சம்

ரூ 10,000

இதையும் படியுங்கள்: TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?

கார்களும்.. அவற்றின் முக்கிய அம்சங்களும்..!

மாருதி ஆல்டோ கே10 மற்றும் எஸ்-பிரஸ்ஸோ ஆகியவை ரூ. 10,000 அல்லது அதற்கும் குறைவான மாதத் தவணையில் வாங்குவதற்கு மிகவும் எளிதான கார்களாகும். குறைந்த கொள்முதல் மற்றும் பராமரிப்புச் செலவை விரும்பும் வாங்குபவர்களுக்கு ஆல்டோ கே10 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் அதே வேளையில், சற்று நிமிர்ந்த ஓட்டுநர் நிலையை விரும்பும் வாங்குபவர்களுக்கு எஸ்-பிரஸ்ஸோ பொருத்தமாக அமைகிறது. எஸ்யுவியை போன்ற டிசைன், கச்சிதமான அளவு மற்றும் கட்டுப்படியான விலை ஆகியவற்றால், முதல் முறை கார் வாங்கும் இளம் வாங்குபவர்களுக்கு க்விட் ஒரு வலுவான தேர்வாக அமைகிறது. நகரப் பயணங்கள் மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்கள் ஆகிய இரண்டிற்கும் ஒரு காரை விரும்பும் வாங்குபவர்களுக்கு, டாடா டியாகோ சிறப்பானதாகும். மாருதி சுசுகியின் செலேரியோ, வேகன் ஆர் மற்றும் ஈக்கோ ஆகியவை நடைமுறைப் பயன்பாடு, எரிபொருள் சிக்கனம் மற்றும் மலிவு விலைக்காக அறியப்படுகின்றன.

இந்திய கார் சந்தையில் முன்பணம் ஏதும் செலுத்தாமல் சொந்தமாக வாங்கக்கூடிய கார் விருப்பங்கள் தற்போது உள்ளன. புதிய கார் வாங்குவது என்பது முக்கியமான பொருளாதார முடிவாக இருப்பதால், முறையான நிதித் திட்டமிடலுடன் செயல்படுவது அவசியமாகும்.
குறைந்த பட்ஜெட்டில் கார் வாங்க விரும்புவோருக்கு, மாதம் 10 ஆயிரத்திற்கும் குறைவான தவணை முறையில் (EMI) கிடைக்கக்கூடிய 10 கார்கள் குறித்த விவரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. நிதி நெருக்கடி இருந்தாலும், இத்தகைய திட்டங்கள் கார் வாங்கும் கனவை நிறைவேற்ற உதவும்.