PulseNews
தொழில்நுட்பம்

நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கான ஸ்மார்ட் கழுத்துப் பட்டை..!

வீட்டில் வளர்க்கப்படும் பூனை, நாய் ஆகிய செல்லப் பிராணிகளுக்கான ஸ்மார்ட் கழுத்துப் பட்டைகளை சீன நிறுவனம் உருவாக்கியுள்ளது. பூனையின் கத்தலும், நாயின் குரைப்பும் எதற்காக என்பதை மனிதர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதை எழுத்துகளாக மொழிபெயர்க்கும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. கழுத்துப்பட்டையில் உள்ள வன்பொருள் மூலம், செல்லப் பிராணிகளின் ஒலிகள், கணினி கட்டுப்பாட்டு மையத்தில் தொகுக்கப்பட்டுள்ள தரவுகளுடன் பகுப்பாய்வு செய்து மனிதர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுத்துகளாக செல்போனுக்கு பகிரப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். நாய் மற்றும் பூனைகள் எழுப்பும் சத்தத்தின் தன்மை, அதன் ஒலி அளவு போன்றவற்றை வைத்து அது தனக்குப் பசிக்கிறது அல்லது வேறு எதையோ சொல்வதாக அந்தக் கழுத்துப் பட்டை மொழிபெயர்த்துச் சொல்லும் என்றும், கணினி மையத்தில் சேகரிக்கப்பட்டுள்ள சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பிராணிகளின் குரல் மற்றும் நடத்தைப் பதிவுகளை பகுப்பாய்வு செய்து முடிவுகள் பெறப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Polimer News1 நாள் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology