ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.26 கோடியில் 'ககன்யாத்ரி நிவாஸ்'..!
ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களுக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் புதிய தனிமைப்படுத்தும் மையத்தை 'இஸ்ரோ' அமைக்க உள்ளது. 26 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள இந்த மையத்திற்கு 'ககன்யாத்ரி நிவாஸ்' எனப் பெயரிடப்பட்டு, இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களுக்குப் பயணத்திற்கு முன் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கத் தொடர் மருத்துவக் கண்காணிப்பு, உடற்பயிற்சி மற்றும் உலகத் தரத்திலான தங்குமிட வசதிகள் இங்கு வழங்கப்படும். விண்கலத்தில் பல மணி நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருக்கும் சிறப்புப் பயிற்சியும், வீரர்களின் தகுதியை மேம்படுத்தும் சர்வதேசத் தரத்திலான வசதிகளும் இங்கு அமைக்கப்படும். இம்மையம், வெளிநாடுகளைச் சார்ந்திருக்காமல் இந்தியா விண்வெளித் துறையில் சுயசார்பு பெற வழிவகுக்கும்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களுக்காக 'ககன்யாத்ரி நிவாஸ்' என்ற புதிய தனிமைப்படுத்தும் மையத்தை இஸ்ரோ அமைக்க உள்ளது. 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள இந்த மையத்திற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்குப் பயணத்திற்கு முன்னதாகத் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக உலகத்தரம் வாய்ந்த தங்குமிட வசதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட உள்ளன.