லைசென்ஸ் ரத்து; அரசின் அறிவிப்பால் அலறும் ஓட்டுநர்கள்
மராட்டிய மாநிலத்தில், தற்போது மாநில அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் உள்ள ஆட்டோ, டாக்சி மற்றும் செயலிகள் மூலமாக இயங்கும் வாடகை கார்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு புதிய விதி முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள், பயணிகளிடம் உரையாடும் அளவிற்கு மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அந்த ஓட்டுநர்களின் உரிமம் (லைசென்ஸ்) 3 மாதங்கள் வரை இடை நீக்கம் செய்யப்படலாம். மேலும், தொடர்ந்து இந்த விதிமுறை மீறப்பட்டால் ஓட்டுநர் உரிமம் நிரந்தமாக ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை, வருகின்ற செவ்வாய் (18-08-26) முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, மராட்டிய மோட்டார் வாகன சட்ட விதிகள் 1989 ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆட்டோ, டாக்சி மாற்றும் செயலிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வாடகை கார்களை இயக்கும் ஓட்டுநர்கள் பணிக்குத் தேவையான அளவுக்கு மராத்தி மொழி அறிவை பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் கூறுகையில், ”பயணிகளுடன் முறையான தொடர்பு கொள்ளவும், பாதுகாப்பான மற்றும் முறையான பயணத்தை உறுதி செய்யவும் உள்ளூர் மொழி அவசியம். மராத்தி மொழி தெரியாத ஓட்டுநர்கள் ஏற்கனவே இருந்த சட்டங்களிலிருந்த குழப்பங்களைப் பயன்படுத்தித் தப்பித்து வந்தனர். அதன் காரணமாக தற்போது விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்த புதிய விதி அமல்படுத்த உள்ள நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர்களுக்குச் சோதனை நடத்தப்பட உள்ளது. மேலும், ஓட்டுநர்கள் விதிகளை மீறுவது உறுதி செய்யப்பட்டால் உரிமம் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் ஓட்டுநர்களிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து வட்டார அலுவலகங்களில் மராத்தி தேர்வெழுத ஓடுநர்கள் குவிந்து வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ, டாக்ஸி மற்றும் செயலிகள் மூலம் இயங்கும் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்காகப் புதிய விதிமுறைகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி, ஓட்டுநர்கள் பயணிகளிடம் பேசும் அளவிற்கு மராத்தி மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையைப் பின்பற்றாத ஓட்டுநர்களின் உரிமம் மூன்று மாதங்கள் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. தொடர்ந்து இந்த விதிமுறை மீறப்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.