தமிழக காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை பராமரிக்கும் காலம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை எவ்வளவு காலத்திற்குப் பராமரிக்க வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்…

தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை எவ்வளவு காலத்திற்குப் பராமரிக்க வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ஆய்வாளர் ராமராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலுக்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாக சக்திவேல் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் பின்னணியில் தற்போது காவல் நிலைய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைச் சேமித்து வைப்பதற்கான காலக்கெடு மற்றும் அது தொடர்பான நடைமுறைகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.