சென்னையில் அறிமுகமானது புதிய திட்டம்: 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்
இந்தியன் ஆயில் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை வழங்கும் நோக்கில், புதிய விரைவு விநியோகத் திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, சமையல் எரிவாயு சிலிண்டரை…
இந்தியன் ஆயில் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை வழங்கும் நோக்கில், புதிய விரைவு விநியோகத் திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்த நான்கு மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம், சிலிண்டர் விநியோகத்திற்காக வாடிக்கையாளர்கள் இனி பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. வாடிக்கையாளர்களுக்குச் சேவையை எளிமையாகவும் விரைவாகவும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விரைவு விநியோகச் சேவையைப் பெற விரும்பும் பயனர்கள், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியைப் பயன்படுத்தி சிலிண்டருக்கான முன்பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.